உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலட்சிய பூமி.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

}09 கமிஷனர் டெங்பிங் அவனை அமைதியாக ஆராய்ந்தான். "அப்படிச் செய்ய என்னல் இயலாது. கம்யூ னுக்கு நீ தேவை! நீ வருத்தப்படாதே. உன்னல் அளிக்கமுடியாத சரியான பயிற்சியை உன் மகன் அங்கு பெறுவான்.” r சாங்ஃபூ வாட்டசாட்டமான வலுமிக்க அமைதி யான மனிதன். ஒர் அறை அறைந்தானேயானல் அந்த உயர் அதிகாரியைக் கீழே தள்ளிவிடுவான் அவன். ஆனல் அவன் தன்னுடைய விரல் மூட்டுக்கள் வெளுத்து வெள்ளையாக மாறும் வ ைர யி ல் கைமுஷ்டியை இறுக மூடியபடி தன்னைக் கட்டுப் படுத்திக்கொண்டு அமைதியாக இருந்தான். உயர் அதிகாரி-கமிஷனர் அவனை உற்றுப் பார்த்துப் புன்னகை புரிந்தான். தான் செய்த தவறு என்ன என்பதை அறியக் கூட முடியாத அந்தப் பையனை ஒரு காவலன் அழைத்துச்சென்று விட்டான். சம்பவங்களின் எதிர்பாராத திருப்பம் நடவடிக் கைகளைத் தடைச்செய்தன. சுற்றிலும் நின்ற ஜனங்கள் வம்பளந்து கொண்டிருந்தனர். "உங்கள் இடங்களுக்குத் திரும்பிப் போங்கள்!" என்று டெங்பிங் கத்தினன்; சாங்ஃபூ குனிந்த தலையுடன் தன் அன்னையிடம் சென்ருன். அவனுடைய மெலிந்த இளம் மனைவி குப்புறப் படுத்துக்கிடந்த தம் மாமியாரின் உடலைப் புரட்டித் திருப்பிக் கொண்டிருந்தாள். அவள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலட்சிய_பூமி.pdf/109&oldid=752666" இலிருந்து மீள்விக்கப்பட்டது