உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலட்சிய பூமி.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

111


'இல்லை. நான் அயர்ந்த தூக்கத்தில் இருந் தேன்.” என்று சிற்றுண்டி மேஜையிலிருந்த ஜேம்ஸ் பதில் மொழிந்தான். 'வைகறைக்குக் கொஞ்சம் முந்தின பொழுது அந்நேரத்தில் விழித்துக்கொள்வது வழக்கமாகி விட்டது. இப்போது. ஆனலும் சற்று சிரமமாகத் தான் இருக்கிறது. என் படுக்கையிலிருந்து ஜன்னல் வழியாக வெளியே பார்த்தேன். சில நட்சத்திரங்கள் கண்ணுக்குத் தெரிந்தன. எதற்காக இந் த த் துப்பாக்கிப் பிரயோகம் என்று ஆச்சரியப்பட்டுக் கொண்டிருந்தேன். மீண்டும் உறக்கம்பிடிக்கவில்லை.” நெற்றிக்குக் குறுக்கே ஒரு கைக்குட்டையைக் கட்டிக் கொண்டான் ஜேம்ஸ். 'காலையிலேயே வெயில் இப்படிக்கொளுத்துகிறதே! இரவில் சாப் பாடு கொண்டுவந்தபோது அந்தப் பையனின் முகத்தைக் கவனித்தீர்களா? பொங்கி வெடிக்கப் போகிறவன்போலவே தோன்றினன். காரணம் புரியவில்லை; என் உடம்பு நலம் குன்றியிருப்பதாகத் தோன்றுகின்றது” என்ருன். “பகிரங்கமாகத் துரக்கிலிடுவதை நான் பார்த்த துண்டு. ஆனல் விடியற்காலையில், அமானுஷ்யமான வகையில் ஒரு துப்பாக்கிச் சத்தம் கேட்கிறது.என்ன நடந்துகொண்டிருக்கிறது என்பது புரியவில்லை.” ரத்தம் சிந்தப்பட்டால், அந்த விவரம் வழக்க மாக ஆஸ்பத்திரிக்குத்தான் முதன்முதலில் தெரியும். காலைச் சிற்றுண்டிக்குப் பிறகு, ஆஸ்பத்திரியிலிருந்து சகோதரி ஆங்கெலிகாவுக்குத் தகவல் ஒன்று வந்தது. காயம் அடைந்தவர்களுக்குப் பணிபுரிய சிப்பந்திகள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலட்சிய_பூமி.pdf/111&oldid=1274869" இலிருந்து மீள்விக்கப்பட்டது