பக்கம்:இலட்சிய பூமி.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

112


தட்டுப்பாடாக இருந்தமையால், அவளால் உதவ முடியுமா என்று கேட்கப்பட்டிருந்தது. அன்று ஞாயிற்றுக்கிழமை. * விஸ்டர் ஆங்கெலிகாவின் இதயம் சிறிதுநேரம் ஊசலாடியது. பின், தன்னைத் தயார் செய்து கொண்டு ஆஸ்பத்திரிக்குப் புறப்பட்டாள். வெளியிலிருந்து வந்து சிகிச்சை பெறும் நோயா ளிகளுக்குரிய கூடத்தின் தரையில், கைகளும் பாதங் களும் ரத்தம் தோய்ந்து சதசதவென்று காய மடைந்த ஏராளமானபேர் கிடத்தப்பட்டிருந்தனர். வலி தாளாமல் மூர்க்கத்தனமாக முரண்டு பிடித்த மூன்று வயசுக் குழந்தையை அமைதிப்படுத்த முயன்றுகொண்டிருந்த பெண் ஒருத்தி கால்களைச் சம்மணமிட்டுத் தரையில் குந்தியிருந்தாள். உதவுங் கள் என்று வாய்விட்டுச் சொல்ல முடியாத ஒரு மனப்பூர்வமான பிரார்த்தனையுடன் ரத்தம் பீறிட்ட குழந்தையின் முன் கையைப் பிடித்துக் கொண்டு, தன்னைக் கடந்துசென்ற மதப்பிரச்சார சபைப் பெண்மணியைக் கெஞ்சுதலுடன் பார்த்தாள் அவள். குழந்தையைப் பார்வையிடுவதற்காக ஸிஸ்டர் ஆங்கெலிகா நின்ருள்; குழந்தை அதிர்ச்சியடைந் திருந்தது. அதன் கண்கள் அகன்று பெரிதாகத் தோன்றின; பாதங்கள் வலிப்பு நோயால் இழுத்து இழுத்து உதறின. அதைச் சாந்தப்படுத்தும் நோக்கத்துடன் அதன் முகத்தை தன் மார்பகத்தில் புதைத்த வண்ணம் இருந்தாள் குழந்தையின் தாய். "சற்றும் தெய்வ நம்பிக்கையற்ற சிப்பாய்கள்' என்று ஸிஸ்டர் ஆங்கெலிகா தன் மனத்திற்குள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலட்சிய_பூமி.pdf/112&oldid=1274870" இலிருந்து மீள்விக்கப்பட்டது