உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலட்சிய பூமி.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

113


சபித்துக்கொண்டு, குழந்தை யி ன் புஜத்தைத் தூக்கிப் பரிசோதனை செய்தாள். ஒரு துப்பாக்கி ரவை அவனுடைய சுண்டுவிரலைப் பிய்த்துவிட்டு, முன்கையை உராய்ந்திருந்தது. ரத்தம் இன்னமும் சொட்டுச் சொட்டாக வடிந்து, அவனுடைய அன்னை யின் கால் சட்டைகளில் விழுந்தது. நான்கைந்து மருத்துவப் பணிப் பெண்கள் மிகவும் சுறுசுறுப்பாகச் செயற்பட்டனர். கெட்டி யாகக் குழந்தையைப் பற்றிய வண்ணம், அந்தத் தாயை எழச் செய்ய ஆங்கெலிகா உதவினுள். 'நீ எந்த ஊர்?" 'போக்லோ!' 'யார் உன்னைச் சுட்டார்கள்?" 'இராணுவ வீரர்கள்!” 'ஏன்?” "தெரியாது!” காயமடைந்தவர்களுக்குச் சிறிது நேரமாக சிகிச்சை செய்து கொண்டிருந்த டாக்டருக்கும் மருத்துவப் பணிப் பெண்களுக்கும் சுறுசுறுப்பாக உதவி செய்து கொண்டிருந்தாள் விஸ்டர் ஆங்கெலிகா. சிகிச்சை பெற வேண்டி மற்றவர்கள் பொறுமையாகக் காத்திருந்தனர். அன்று தினம் ஒய்வு பெற்றிருந்த நர்ஸுகள் அனைவரும் திருப்பி அழைக்கப்பட்டிருந்தனர். காலில் துப்பாக்கி சூடுபட்ட சிறுவன் ஒருவ னுக்கு உதவிய வண்ணம் அசாய் உள்ளே நுழைந் ததை அவள் பார்த்தாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலட்சிய_பூமி.pdf/113&oldid=1274871" இலிருந்து மீள்விக்கப்பட்டது