உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலட்சிய பூமி.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

114


அவள் அசாயிடம், என்ன நடந்ததென்று விசா ரித்தாள். 'பாலத்தைக் கடக்க முயன்றதால், இந்த ஆட்கள் சுடப்பட்டனர். இன்று காலையில் என்ன நடந்ததென்பதைப் பார்ப்பதற்கு ஒரு கூட்டம் கூடி லிட்டது. போக்லோவில் கலகம் இருந்தது. இவர்கள் தப்பிக்க முயன்றனர். சிறிது தூரத்தில் மூன்று பேர்கள் செத்துக் கிடக்கின்றனர். நான் அவர்களைப் பார்த்தேன். இரண்டு ஸ்திரீகள், ஒரு குழந்தை! அவர்களுக்கு அருகில் செல்ல யாரும் அனுமதிக்கப்படவில்லை. பாலத்தின்மீது எல்லா போக்குவரத்தையும் மூடிவிட்டது காவல் படை. இரவில் தப்பிச் சென்றிருந்தவர்களைச் சேகரம் செய்யும் நோக்கத்துடன் வீதிகளிலுள்ள ஜனங்களை விசாரித்துக் கொண்டிருக்கிருர்கள் அவர்கள்." விஸ்டர் ஆங்கெலிகா பொறுமையுடன் சகித் துக்கொண்டு வருத்தம் தோய புன்சிரிப்புச் சிரித் தாள். "அசாய், உனக்கு நல்ல வாழ்வு கிடைக்கும். அந்தப் பையனை அங்கேயே உட்காரும்படி செய். அவன் கொஞ்ச நாழிகை காத்திருக்க வேண்டி வரும்." ஈஸுவைப் பார்த்து, தான் அவளுடன் பேச விழைந்ததாகக் கண்ணுல் சமிக்ஞை செய்தான் அசாய். குட்டி ஸ்ப்ரெளட்டுடன் அவன் கொண் டிருந்த நட்பின் காரணமாக அவளை அவனுக்கு நன்ருகப் பழக்கம். ஈஸுவுக்குக் கோபம் வந்தது; "உனக்கு என்ன வேண்டும்?" என்று கேட்டாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலட்சிய_பூமி.pdf/114&oldid=1274872" இலிருந்து மீள்விக்கப்பட்டது