பக்கம்:இலட்சிய பூமி.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

115


அவன் அவளுக்குப் பக்கவாட்டில் நகர்ந்து அவளது அங்கியின் கைப்பாகத்தை இழுத்தான். “என்னுடன் வாருங்கள்," என்று அழைத்தான் பையன். நான் இப்போது என் கடமையை முடிப்பதில் முனைந்திருக்கிறேனே, அது உனக்குப் புரிய வில்லையா?” - பொறுமையிழந்த முகச் சுளிப்புடன் அவளை வற்புறுத்தினன் அசாய். "என்னுடன் வந்து, ஒரு ஸ்திரீயின் உயிரைக் காப்பாற்றுங்கள். பாலத்தில் இறந்த மனிதர்கள் சிலர் கிடக்கிரு.ர்கள். உங்கள் சிநேகிதர் ஒரு வெள்ளையர். சரிதானே?’ "அவருக்கும் இதற்கும் என்ன சம்பந்தம்?” "அவரும் வரவேண்டுமென்று ஆசைப்படுகிறேன் நான்." "எங்கே? எதற்காக?" 'பாலத்தில் கிடக்கும் இறந்த மனிதர்களுக் காக!...." "இறந்த மனிதர்களா?...இறந்த மனிதர்களை அவர் காண வேண்டுமென்று நீ ஏன் விரும்புகிருய்!" "அவர் வந்து பார்க்க வேண்டும். இது என் விருப்பம். பாலத்தில் இரண்டு ஸ்திரீகளும் ஒரு குழந்தையும் இறந்து கிடக்கின்றனர்; அல்லது இறந்து போனதாக கருதப்படுகிறது. ஆனல் ஸ்திரீ களிலே ஒருத்தி இறந்து கொண்டிருக்கிருள்; ஆனல் இறந்துவிடவில்லை. அவர்களே அணுக காவல் படையினர் யாரையும் அனுமதிக்கவில்லை. உங்கள் சிநேகிதர் ஒரு ஆங்கிலேயர்; பலசாலி. அவரிடம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலட்சிய_பூமி.pdf/115&oldid=1274873" இலிருந்து மீள்விக்கப்பட்டது