பக்கம்:இலட்சிய பூமி.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

118


இருந்தது. கைது செய்யப்பட்டவர்களின் மனைவி மார்கள் நேற்றிரவு ஆத்திரங்கொண்டு சிறைக் குள்ளே பிரவேசித்துவிட்டார்கள். படை வீரர்களில் எத்தனை பேர் கொல்லப்பட்டார்கள் என்று ஒருவருக் கும் தெரியாது. எல்லாம் இருட்டில் நடந்தது. கிராமத்து மக்கள் பீதியடைந்து அவரவர்தப்பிப் பிழைக்க முயன்றனர். இன்று காலையில் ஆற்றின் கரையில் பலர் சுடப்பட்டனர்.” 'அரிசிக் கலகம் ஏன் நடந்தது?" 'எனக்குத் தெரியவில்லை. மக்கள் பசியால் துடித்துக்கொண்டிருக்கையில், அரிசி, தான்யங்களை எலிகள் தின்னும்படி அவர்கள் அனுமதித்ததாக நான் கேள்விப்பட்டேன். அது சரியல்ல. அப்படித் தானே?” "அது சரியல்ல என்றே தோன்றுகிறது." 'இன்னும் கூடுதலாக துப்பாக்கிப் பிரயோகம் நடக்கவே செய்யும். போக்லோ-டுங்க்வான் மனிதர் களின் சுற்றத்தார்கள் நகரத்தில் ஏராளமாக இருக் கிரு.ர்கள்.” - பாலத்தின் தலைப்புப் பகுதியைச் சுற்றிலும் வீரர்கள் அடங்கிய காவல் வளையத்தை அமைத்து ஜனங்களை வரிசையாக நிறுத்த முயன்றுகொண் டிருந்தது காவல்படை. "துப்பாக்கிப் பிரயோகம் முடிந்துவிட்டது. நீங்கள் என்ன பார்க்கவேண்டும்?” பாமர ஜனங்கள் சில நிமிட நேரத்துக்கு நின்று விட்டுப் புறப்பட்டார்கள். பாலத்தில் கிடந்த அந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலட்சிய_பூமி.pdf/118&oldid=1274875" இலிருந்து மீள்விக்கப்பட்டது