பக்கம்:இலட்சிய பூமி.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

119


மூன்று பிணங்களைப் பார்ப்பதற்காக மற்றவர்கள் வந்து சேர்ந்தனர். அசாய், ஜேம்ஸையும் ஈஸ்"வையும் அழைத்துக் கொண்டு கூட்டத்தில்உந்திச்சென்று முன்னேறினுன்; அனைவரும் திரும்பினர். அசாய் தன்னுடைய முத்திரைச் சீட்டைக் காண்பித்தான்; முன்னே போய் பிணங்களைப் பார்ப் பதற்கு அனுமதி கோரினன். “அந்த அம்மாள் இன்னமும் சாகவில்லை.” என்ருன் அவன், ஒர் உடலைச் சுட்டியபடி. ராணுவத் தலைமை அதிகாரி-ஸ்ார்ஜெண்ட் அவ்விடம் வந்து, வி ஷ ய ம் என்னவென்று கேட்டான். அசாய், "அந்த ஸ்திரி தன் முகத்தைத் திருப்பி யதை நான் பார்த்தேன்!” என்று விளக்கம் கொடுத்தான். "வேறு யாராகிலும் பார்த்தார்களா?” பதில் ஏதும் வரக்காணுேம். அந்த அயல்நாட்டானைச் சந்தேகக் கண் கொண்டு பார்த்தான் சார்ஜெண்ட். ஈஸு கூறினுள்: "நான் ஆஸ்பத்திரியிலிருந்து வருகிறேன். நான் ஒரு நர்ஸ். இந்த ஆங்கிலேயர் ஒரு டாக்டர். அந்த ஸ்திரீயைப் பரிசோதனை செய்து பார்க்க அனுமதிப்பதில் தொந்தரவு ஒன்றும் இருக்காது. அவள் இன்னமும் உயிருடன் இருக்கும் பட்சத்தில், நாங்கள் அவளை ஆஸ்பத்திரிக்குக் கொண்டு செல்கிருேம்." -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலட்சிய_பூமி.pdf/119&oldid=1274876" இலிருந்து மீள்விக்கப்பட்டது