உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலட்சிய பூமி.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1&0 ராணுவத் தலைமை அதிகாரி விடை எதுவும் சொல்லமுடியவில்லை. வெள்ளை மனிதர்கள் எல்லா ருமே சீனர்களுக்கு எவ்வகையிலேனும் டாக்டர்கள் தாம்! 'நல்லது.போய்பாருங்கள்!'பிறகுஜனங்கள்பக்கம் திரும்பி, "திரும்பிச் செல்லுங்கள். பார்ப்பதற்கு ஒன்றும் இல்லை!” என்று கூக்குரல் எழுப்பினர். முப்பதடி தூரத்தில் கிடந்த அசைவற்ற உடல்களை நோக்கி அவர்கள் மூவரும் விரைந்தனர். இராணுவத் தலைமை அதிகாரி அவர்களைப் பின் தொடர்ந்தான். ஈஸ் அந்த ஸ்திரீயின் அருகில் மண்டியிட்டு உட்கார்ந்துகொண்டு, அவள் நாடி யைப் பார்த்தாள். கண் இதழ்களைத் திறந்தாள். ஜேம்ஸ் அவளது இருதயத்தைக் கவனித்துக் கேட்டான். இராணுவத் தலைமை அதிகாரியை நோக்கி, 'நீங்கள் கவனியுங்கள்; அவளுடைய இருதயம் இன்னமும் அடித்துக்கொண்டிருக்கிறது," என்ருன் அவன். ஸார்ஜண்ட் மண்டியிட்டு, அவள் இருதயத்தை உற்றுக் கேட்டான்; நாடித் துடிப்பை உணர்ந்தான்: அவனுக்குத் திருப்தி உண்டாயிற்று. பிறகு, அவன் மற்ற இருவரையும் பரிசோதித்தான். ஒருத்தி பாட்டி, அவளது பாதங்கள் சேர்த்து கட்டப்பட் டிருந்தன. முழங்கால்களில் உரைந்த ரத்தம் மூடி யிருந்தது. அடுத்ததாக இறந்த பத்து வயதுச் சிறுவன் வாயிலிருந்து ரத்தம் ஒழுக, அவள் பக்கத் தில் கிடந்தான்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலட்சிய_பூமி.pdf/120&oldid=752679" இலிருந்து மீள்விக்கப்பட்டது