உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலட்சிய பூமி.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122


அமைதியுடனும் குழப்பம் அடையாமலும் சார்ஜண்ட் திரும்பினன். அசாய் பீதியின் வடிவ மாகத் தோன்றினன். ஜேம்ஸ் மெளனமாக நடந்து சென்ருன்; மரணப் பிடியில் ஊசலாடிய அந்த ஸ்திரீயின் மேனி அவனு டைய கைகளில் இருந்தது; அவனுக்குப் பக்கமாக ஈஸ் நடந்தாள். - அவர்கள் நெருங்கியதும், கூட்டம் பின் வாங்கி Ա5l. "இனி போய்விடுங்கள்!” என்று கூச்சலிட்டான் இராணுவத் தலைமை அதிகாரி. இனிமேல் பார்ப் பதற்கு உங்களுக்கு ஒன்றுமில்லை!" என்று தொடர்ந் தான். நீண்ட நடையுடன் அவர்களைக் கடந்தான். அப்போது, ஜனங்களின் கண்கள் பிடிவாதமாக மெளனம் சாதித்தன; பகைமை உணர்ச்சியும் அவற்றில் இருந்தது. நீண்ட தாடியுடனும் அகலமான குடியானவத் தொப்பியுடனும் கூடிய கிழவன் ஒருவன் அவனிடம் நெருங்கி வந்து 'மகனே, அந்தக் கிழவி மிகவும் முதிர்ந்த பிராயம் வரை வாழ்ந்திருக்கிருள். அவளுக் குக் கண்ணியமான ஈமச்சடங்கு நடைபெற நீ அனுமதித்திருக்க வேண்டும்!” என்ருன். "எனக்குத் தெரியும் பெரியப்பா. ஆல்ை,அந்தச் சவங்கள் எல்லோரது கவனத்தையும் ரொம்பவும் பயங்கரமாகக் கவர்ந்து கொண்டிருந்தன.” கிழவன் கடந்து சென்றன். குனிந்த தலையுடன் ஜனங்கள் கலைந்து போய்க் கொண்டிருந்ததை அதிகாரி சவனித்தபோது,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலட்சிய_பூமி.pdf/122&oldid=1274878" இலிருந்து மீள்விக்கப்பட்டது