உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலட்சிய பூமி.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

128 விவகாரம் இத்துடன் முடிந்துவிடவில்லை என்றே அவனுக்கு உள்ளுறத் தோன்றியது. வயதான அந்தப் பெண்மணியின் உடல் மிகவும் கனமாக இல்லை. அவள் முகம் அதைக் காட்ட வில்லை. தொண்ணுறு பவுண்ட் எடைக்குமேல் அவள் இருக்கமாட்டாள். சாப்பாட்டு வசதி அவளுக்குக் குறைவு. ஜேம்ஸ், ஈஸு, அசாய் மூவரும் தெரு வழியே சென்றபோது, ஆடவர்களும் பெண்டிர் களும் வெளிப்படையான வியப்போடு பார்த்தார் கள். ஓரிருவர் கை தட்டினர்கள். அவர்களுக்கு வழியை உண்டாக்கிய வண்ணம் முன்னே நடந்து சென்ருன் அசாய், அன்றைக்கு அவன் எல்லோரது கவனத்தையும் கவர்ந்திழுத்துக் கொண்டிருந்த தன்மையைப்பற் றியோ, அல்லது காப்பாற்றப்பட வேண்டி தான் கைகளில் ஏந்தியிருந்த அந்த அம்மாளைப்பற்றியோ ஜேம்ஸ் சிந்தித்துக் கொண்டிருக்கவில்லை. ஆனல், தனக்கு முன்னே நிமிர்ந்த நடையுடன் போய்க் கொண்டிருந்த அந்தப் பையனைப்பற்றித் தான் ஆச்சரியமாகச் சிந்தித்துக் கொண்டிருந்தான்; முடி வில் தன்னுள்ளே திருப்தியடைந்தான். - ஆஸ்பத்திரியில் குழப்பம் குறைந்திருந்தது. காயமடைந்தவர்களில் பெரும் பகுதியினர் முதல் சிகிச்சை பெற்றுவிட்டனர். சிறிய காயங்களுடன் இருந்தவர்கள் வீட்டுக்கு அனுப்பப்பட்டார்கள். ஆஸ்பத்திரியில் உள்ள நோயாளிகளுக்குச் சிகிச்சிை அளிப்பதில் டாக்டர் கருத்துடன் இருந்தார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலட்சிய_பூமி.pdf/123&oldid=752682" இலிருந்து மீள்விக்கப்பட்டது