பக்கம்:இலட்சிய பூமி.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

124


காலமடைந்திருந்த பெண்மணி ஒருத்தியைக் கைகளில் தாங்கிய வண்ணம் ஈஸாவுடன் ஜேம்ஸ் ஆஸ்பத்திரிக்குள் நுழைந்ததைக் கண்டதும் ஸிஸ்டர் ஆங்கெலிகா திடுக்கிட்டாள். அவன் முகம் சூரிய வெப்பத்தால் சிவந்து முகம் உஷ்ணமாக இருந்தது. கழுத்துப் பகுதியில் வேர்வை ஊற்றெடுத்து ஓடிக் கொண்டிருந்தது. விரைவுடன் அந்த அம்மாளை டோலியில் வைத்து உட்புற அறை ஒன்றிற்குக் கொண்டு சென் ருர்கள். விளக்கம் தேடும் வகையில், தன்னுடைய உடன் பிறந்தார் மகனையும் ஈஸ்-வையும் ஒரு கணம் உறுத் துப் பார்த்தாள் விஸ்டர் ஆங்கெலிகா. சோர்வு டன் தோள்களை ஒரு குலுக்குக் குலுக்கிக் கொண்டு, அந்தப் பையனைத் தமாஷாகப் பார்த்தான். 'நம் இருப்பிடத்துக்கு இவன் வந்து, உதவி செய்யும்படி என்னிடம் கோரினன்' என்ருன். அசாய் பேசின்ை: 'இந்த அம்மாள் செத்துச் சவமாகிவிட்டாள் என்ற தீர்மானத்தின் பேரில் பாலத்தில் கிடந்தாள். அவள் உயிருடன் இருப்ப தாக நான் கண்டு கொண்டு, இவரை உதவிக்கு அழைத்துக் கொண்டேன்.” ஈஸ் சோர்வுற்றுப் பெருமூச்செறிந்தவாறு, "காயமுற்றவர்கள் இன்னும் யாராவது வந்து கொண்டிருக்கிருர்களா?' என்று விசாரித்தாள். "இனி யாரும் இல்லையென்றே தோன்றுகிறது. சிலர் ஒளிந்து கொண்டிருக்கிருர்கள்; மருந்து போட் டுக்கொள்ள வரமாட்டார்கள். மற்ற இரு உடல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலட்சிய_பூமி.pdf/124&oldid=1274879" இலிருந்து மீள்விக்கப்பட்டது