உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலட்சிய பூமி.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

125


களையும் காவல் படையினர் காலால் உதைத்து ஆற்றில் தள்ளிவிட்டனர். அவை ஆற்ருேடு போய் விட்டன. பார்வையாளர் கூட்டம் கரையில் கூச்சல் போட்டுக் கொண்டிருந்தது என் காதில் விழுந்தது' என்று விவரித்தான் அசாய். "என்ன கூச்சல் போட்டார்கள்?’ என்று லிஸ்டர் ஆங்கெலிகா வினவினுள். 'முதலில் அவன் பையனைக் காலால் உதைத்துத் தண்ணிரில் தள்ளினன்......... ** "யார் அப்படிச் செய்தது?" என்று இடைமறித் தாள் அவள். 'சார்ஜண்ட்!...இந்த அம்மாளுக்கு வேண்டிய உதவியை நாங்கள் செய்து கொண்டிருந்தோம், கிழவி ஒருத்தியின் சவம் ஆற்றில் எலியைப்போல வீசப்பட்டதும், கூட்டத்தில் ஆரவாரம் மிகுந்தது. காவல் படையினர் கர்ஜனை செய்து கூட்டத்தைப் பின்னே தள்ளி விலக்கினர். அவர்களால் சமாளிக்கக் கூடுமென்று எனக்குத் தோன்றவில்லை. அவர்கள் சமாளிக்கமாட்டார்கள்!...." பையன் பேசிக்கொண்டிருந்த சமயத்தில் ஈஸ்", ஜேம்ஸையே பார்த்துக் கொண்டிருந்தாள். அத்தை யின் முகம் முதல் தடவையாகச் சிவப்பாக மாறிய தைக் கண்டான் ஜேம்ஸ். அவள் மெதுவாகச் சொன்னுள்; சீன மக்கள் அந்த ஒரு விஷயத்தை மட்டும் அனு மதிக்க மாட்டார்கள். மரியாதையுடன் கூடிய ஈமக் கடன் செய்வதற்கு ஒவ்வொருவனுக்கும் பாத்தி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலட்சிய_பூமி.pdf/125&oldid=1274880" இலிருந்து மீள்விக்கப்பட்டது