பக்கம்:இலட்சிய பூமி.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

126


யதை உண்டு. குற்றவாளியாக ஒருவன் இறந்தால் கூட அவனுக்கும் இவ்வுரிமை இருக்கிறது?” பெருமிதம் கொண்ட பார்வையை ஜேம்ஸ் மீது வீசியவளாக 'எனக்கு வேலை இருக்கிறது," என்ருள் ff ଶ}tp. அசாய், 'நானும் போகவேண்டும்” என்று தெரி வித்தான். "அசாய், நல்ல சேவை இது!” என்று ஆங் கெலிகா பாராட்டினள். 'அவ்வளவு அவசரம் என்ன?...கொஞ்சம் தண்ணிர் குடித்துவிட்டுப் போகலாமே!” என்ருன் ஜேம்ஸ். - வழியில் அசாயிடம், 'ஆங்கிலேயனுடன் நீ காணப்படுவதற்காக நீ பயப்படவில்லையே?’ என்று கேட்டான் ஜேம்ஸ். 'ஊஹல்ம், நான் கட்சி ஆள். ஒவ்வொருவருக் கும் என்னைப் புரியும்." வீட்டில் அசாய்க்கு கண்ணுடிப் பாத்திரம் நிறைய தண்ணீர் கிடைத்தது. ஜேம்ஸ் சுத்தமாகக் கழுவினன். "களைத்துவிட் டாயா?" என்று நனைந்த டவலினல் முன் கையைத் துடைத்துக் கொண்டே கேட்டான். 'இல்லவே இல்லை!" என்ருன் அசாய், ஜேம் ஸையே பார்த்த வண்ணம் உட்கர்ர்ந்திருந்தான் அவன்.'ஆங்கிலேயர்கள் என்ருல் எனக்குப் பிரியம்!” என்று தொடர்ந்தான். "எங்களை நீ எந்த வகையில் விரும்புகிருய்?"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலட்சிய_பூமி.pdf/126&oldid=1274881" இலிருந்து மீள்விக்கப்பட்டது