பக்கம்:இலட்சிய பூமி.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

187 கொண்டதுமாதிரி மெதுவாக இழுத்து இழுத்து அவள் பேசிளுள். இன்னும் ஏராளமான பட்டு உடைகள் அவளிடம் இருந்தன; அவற்றை அவள் வீட்டில் இருக்கையில் அணிந்துகொண்டாள். வெளி யில் புறப்பட்டுச் சென்ருல், உயர்ந்த கட்சி உறுப் பினர் மாதிரி, பருத்தியாலான நீண்ட கையுள்ள மேலங்கியையும் கால்சட்டைகளையும் அவள் அணிந்து கொள்ளவேண்டும். தனது மங்கலான பழுப்பு நிற முள்ள சுங்ஷான் உ டு ப் பு க் க ளை அணிந்த போதும்கூட, அவள்பால் பெண்மையின் வசீகரம் மிளிர்ந்தது. புரட்சி ஏற்பட்டபோது, அவளுக்கு வயசு இருபத்தொன்று, வெய்ச்சோவில் மிகவும் பிரசித்த மான முறையில் பொதுமக்களைச் சந்தோஷப்படுத் தியவர்களிலே அவள் ஒருத்தி. நகரத்தில் அப் பொழுது உயர்ந்தபட்ச பணக்காரர்களிலே ஒருவ ராக இருந்த ஃபானின் அந்தரங்கக் காதலியாக அவள் கருதப்பட்டாள். அதுமுதல், பெண்களை சந்தோஷத்திற்கென சுயநல நோக்கத்துடன் பயன் படுத்தும் வழக்கத்தை கம்யூனிஸ்ட் கட்சி கடிந்தது: அவளைப் பெண்கள் தொழில் இராணுவப் பகுதியில் சேரும்படி கட்சி வற்புறுத்தியது. காற்று உலே ஒன்றில், நெருப்புக்கு விறகு போட்டுத் தீயைக் கவனித்துக்கொள்ளும் பொறுப்பை அவள் ஏற்ருள், அவளது உலைத்தி பிரமாதமாகக் கர்ஜித்தது. ஒரு பொதுவுடைமை அரசாங்கத்திலும்கூட, அழகான இளம் பெண் கவனிப்புப் பெற்ருள்; விறகு பற்ருக் குறையால் அவள் ஒருபோதும் கஷ்டப்படவில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலட்சிய_பூமி.pdf/137&oldid=752697" இலிருந்து மீள்விக்கப்பட்டது