பக்கம்:இலட்சிய பூமி.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

136


அதுபற்றிய எல்லா நடப்பையும் லெய்வாவுக்கு அசாய் சொல்லியிருந்தான். 'பலே ஆள் நீ!....நீ குழந்தையாக இருந்தது முதல், மேலும் மேலும் பெருகி வரும் உன் சாப் பாட்டுத் திறமைதான் உன்னிடமுள்ள குறிப்பிடத் தக்க விசேஷமாகும்!...” காலையில் ஃபான் ஷெக் டி னுடன் அவளைக் கண்டான் அசாய், ஃபானும் லெய்வாவும் காதலர் கள். லெய்வாவுக்கு வயது முப்பது. சுமாரான அழகி என்று கூறலாம். நடுத்தரமான உயரம்: நெஞ் சின் மேல் பகுதிவட்டவடிவமாக இருந்தது:உருண்ட் கைகள். அவளுடைய சதைப்பிடிப்பான நீண்ட வட்ட முகத்தைவிட்டு ஒதுங்கி அவளது கறுநிறக் கூந்தல் அழகாகத் தொங்கியது. இளமையைக் கடந்த மத்திய வயதுப் பெண்ணுக அவள் இருந்தாலும், வடிகு அம்மையின் முதிர்ந்த அழகுக் கவர்ச்சி’ அவளிடம் பொலிந்தது; மனத்தை உருக்கும் வகை யில் அவள் கண்கள் அமைந்திருந்தன. சிறிய வெள்ளைக் கால்சட்டைக்கு மேலே, ஜரிகைச் சித்திர வேலை செய்யப்பட்டிருந்த வெளிர் சிவப்பான இறுகிய உள்சட்டை தரித்திருந்தாள் அவள். பத்தாண்டு களுக்கு முன் நாகரிகமென்று கருதப்பட்ட செருப்புக் களை அவள் அணிந்துகொண்டிருந்தாள், அவளுடைய குரல் இனிமையாக இருந்தது: மனத்தளர்ச்சியுடன் பேசினுள்; எல்லோருக்கும் பரிச்சயமான ரீதியில், அவளிடம் திட்டமற்ற சஞ்சல சுபாவம் குடிகொண் டிருந்தது; இதை ஆடவர்கள் தடுக்கக் கஷ்டப் பட்டனர். சூச்சோ பெண்கள் பழக்கப்படுத்திக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலட்சிய_பூமி.pdf/136&oldid=1274886" இலிருந்து மீள்விக்கப்பட்டது