உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலட்சிய பூமி.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

185 இரண்டாவது: இந்த நடவடிக்கை முழுவதும் காதும் காதும் வைத்தமாதிரி அமைதியாக நடந்தது. கோழியின் கழுத்தில் கைவைக்க கட்டைவிரலும் மற்ற விரல்களும் சாமர்த்தியமாக இயங்கின; ஆகவே சத்தம் எழ எவ்வித முகாந்தரமும் இல்லை. மூன்ருவது: சட்டத்தை மீருமல், கொலை நிரு பிக்கப்பட முடியாது. இறகுக் குவியல்களை காலையில் திறந்தவெளியில் வீசி எறிந்துவிடலாம். எல்லாவற் றிற்கும் மேலாக, அதைக் கழுவிச் சுத்தம் செய்யவோ இறகுகளை நீக்கிவிடவோ அவசியமில்லை; கோழிக் குஞ்சை பிச்சைக்காரர் பாணி'யில் சமைக்கும்போது எண்ணெயோ அல்லது தண்ணிரோ தேவையில்லை. கோழிக்குஞ்சின் உடல் முழுவதும் மூச்சுத் திணறும் படியாகக் களிமண் பூசி, தீமூட்டி, அந்தச் சாம்பலில் அரைமணி நேரம்வரையிலோ அல்லது சற்றுமுன் பின்னுகவோ அதைப் புதைத்து வைக்கவேண்டும். வெந்த களிமண் பூச்சு தேங்காய்மாதிரி திறந்து கொள்ளும். நீராவி கக்கும்-சூடான-சாறு நிரம் பிய கோழிக்குஞ்சின் இறைச்சி அதனுள்ளே காணப் படும். களிமண்ணுேடு இறகுகள் வந்துவிடும். தனக்குச் சொந்தமான கோழிக்குஞ்சுகளைச் சமைத்து, தான் விரும்பிய நேரங்களிலே அவன் ஏன் சாப்பிடக்கூடாது? இதில் வருந்தத்தக்க விஷயம் என்னவென்ருல், ஒரு வாரத்தின் குறுகிய கால நிலையில், ஜனங்களின் வீடுகளிலிருந்து எல்லாக் கோழிக்குஞ்சுகளும் மறைந்துவிட்டன போலத் தோன்றின; ஆலுைம் திருடுவதற்குத் தோதாக ஆள் யாரும் இல்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலட்சிய_பூமி.pdf/135&oldid=752695" இலிருந்து மீள்விக்கப்பட்டது