உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலட்சிய பூமி.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

184 முடியாமலிருந்த ஒரே ஒரு பொருள், ஸ்டேட் எக்ஸ் பிரஸ் சிகரெட்டுகள்தான்! அவன் புகை பிடிப்பதை அவள் விரும்பவில்லை. இது விஷயத்தில் அவள் உறுதி யுடன் இருந்தாள். 'நீ புகை பிடிக்க இது வயசல்ல!” என்று கூறியிருந்தாள். லெய்வா இப்போது, பெண்கள் தொழில் ரோந் துப்படைக்குத் தலைவி. சென்ற பத்து தினங்களாகக் கொண்டாடப் பட்ட கோழிக்குஞ்சு விழா'த் தருணத்தில் இரவில் கடமை செய்யும் பொறுப்பை ஏற்றுக்கொண்டான் அசாய். கம்யூன்கள் எனப்படும் சிறு நகராட்சிப் பிரிவு அமைப்புக்கள் நகரப்பகுதிகளிலும் நிறுவப் பெறுமென்ற வதந்தி பரவியபோது, வெய்ச்சோவில் இருந்த குடும்பத்தினர் தாங்கள் ஆகாரத்துக்கென வளர்த்த கோழிகளைக் கொல்லத் தலைப்பட்டார்கள்; அவை தேசீய மயமாக்கப்படக்கூடாது என்பது அவர்கள் உள்நோக்கம். அசாய்க்கு எதிராக எந்தக் கோழிக்குஞ்சும் பத்திரமாக இருந்ததில்லை. இரவுப் பள்ளியின் சமயம், அவன் விரும்பும் இடங்களுக்குச் சென்று, எதிர்ப்படும் கோழித் திருடனைக் கைது செய்து, கொள்ளையிட்ட கோழிகளைப் பறிமுதல் செய்தான். அங்கு அவனுக்குப் பழக்கமில்லாத குறுக்குப் பாதையோ அல்லது கோழிக்கூண்டோ இருந்ததில்லை. . . . . ... அது சம்பந்தமாக, அசாய்க்கு முடிவான சில கோட்பாடுகள் இருந்தது. முதலாவது; இப்போது சில வீடுகளில்தான் நாய்கள் காவலிருந்தன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலட்சிய_பூமி.pdf/134&oldid=752694" இலிருந்து மீள்விக்கப்பட்டது