பக்கம்:இலட்சிய பூமி.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

188 இழந்திருந்தது நகரம், இராணுவத் துணைப்படை ஒழுங்கான அமைதியை நிலவச்செய்ய வேண்டு மென்று வாங் காஷியங் விரும்பினன். ஆனல் கட்சி யின் மேலிடமோ, இராணுவப் படையில் எழுபதுஎண்பது பேர்கள் போக்லோவில் தங்கியிருக்க வேண்டுமென்று உத்தரவு பிறப்பித்தது. நகரத்தில் என்ன நடந்துகொண்டிருந்தது என்று சொல்வதற்காகவும், தின்பதற்கு பன்ரொட்டி வாங்கிக்கொள்வதற்காகவும் வெய்வாவின் வீடு தேடிப்போயிருந்தான் அசாய். அவன் எப்போதுமே பசியுடன் இருந்தான். அவன் அனதையாக விடப் பட்டதிலிருந்து, வெய்வா ஒருத்தி மட்டுந்தான் அவன் மீது அன்பு சொரிந்து வந்தாள். அவன்பால் பெருந்தன்மையையும் மனப்பூர்வமான அன்பையும் அவள் பொழிந்தாள். பெருந்தன்மையும் மனப் பூர்வமான அன்பும் அரிதான உலகில் வளர்ந்திருந் தான் அவன். முன்னர் பாடகியாக இருந்த பெண் ணுக்கும் அனதைக்கும் இடையே ஏற்பட்ட நட்பு சுமார் பத்து வருஷங்களாக நீடித்திருந்தது. அசாய், வாலிபர் கூட்டுறவு சங்கத்தின் தலைவன், அவன் இப்போது ஒதுங்கத் துணிந்திருந்தான். அவன் சார்பாக டெங்பிங்கிடம் லெய்வா பேசியிருந்தாள், ஒருவேளை அவளுக்கு பிள்ளை இல்லை என்பதாலோ என்னவோ, டப்பாக்களில் அடைக்கப்பட்டிருந்த உயர் ரகச் சுவைப் பொருள்கள், காய்ந்த மாட் டிறைச்சி புகை போட்ட மீன் ஆகியவைகளை எப்பொழுதும் அவனுக்குக்கொடுத்துக்கொண்டிருந் தாள் லெய்வா. அவனுக்கு அவளால் கொடுக்க 9

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலட்சிய_பூமி.pdf/133&oldid=752693" இலிருந்து மீள்விக்கப்பட்டது