உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலட்சிய பூமி.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

132


பிடிக்கப்பட்டு, பிரதேச நிர்வாகத் துறைச் சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்கள் செய்த குற்றம் என்னவென்று சரியாகச் சொல்வது கஷ்டம். முக்கிய மாக, அவர்கள் போக்லோவில் பிறந்தவர்கள். போக்லோவுக்கும் இடையே பிரயாணம் செய்வது சகஜமாகவும் சட்டபூர்வமாகவும் இருந்தது. பிறகு, அவர்கள் மீது இருந்த குற்றச்சாட்டுத்தான் என்ன? இராமத்து மக்களிலே பெரும்பாலான ஸ்திரீகள் சிறையை உடைத்துக் கொண்டு உள்ளே நுழைந்து வடக்கே கப்பலில் அனுப்ப தண்டனை விதித்திருந்த மனிதர்களைக் காப்பாற்றியதாக தொலைபேசிப் புகார்கள் சுட்டிக்காட்டின. போக்லோவைச் சேர்ந்த வயதான பெண்கள் மஞ்சூரியாவில் இயங்கிய தொழில் முகாம் மூலம் சீர்திருத்தம் பற்றிக் கேள் விப்பட்டிருந்தார்கள். அங்கே ஆழமான பனியில் கிரீன்-ஹெய்லங்கியாங் காடுகளில் மரம் வெட்டு வதற்காக சிலர் அனுப்பப்படுவார்கள்; ஏனென்ருல், மரங்கள் மரத்துண்டுகள் இடம்விட்டு இடம் கொண்டுபோகப்படுவதற்குச் சிறப்பாக உதவியது உறைபனி, வெய்ச்சோவில் கைது செய்யப்பட்ட வர்களில் யாராவது இரவுத் தாக்குதலில் பங்கு கொண்டிருந்தார்களா என்பதை நிர்ணயம் செய்வது கடினமாகவே இருந்தது. மேற்படித் தாக்குதலில் ஒரு படைவீரன் கொல்லப்பட்டான்; இரண்டு அல்லது மூன்று பேருக்கு மட்டிலும் சிறிய காயங்கள் ஏற்பட்டன. - சுற்றுவட்டப் பிரதேசங்களிலிருந்து காவல் படைப் பிரிவுகள் சில வந்து சேர்ந்தன. அமைதி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலட்சிய_பூமி.pdf/132&oldid=1274885" இலிருந்து மீள்விக்கப்பட்டது