உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலட்சிய பூமி.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

131


முடியவில்லை. தன் கணவனை சாங்ஃபூவைக் குறித் தும் அவள் கேட்டாள். அவன் என்ன ஆளுன் என்பது ஒருவருக்கும் தெரியவில்லை. இரவோடு இரவாக அவர்கள் சேர்ந்தாற் போல் தப்பிவிட்டனர். மஞ்சூரியாவுக்கு அனுப்பப்பட்டிருக்க வேண்டிய அந்தப் பிள்ளையின் வாழ்வு ஆற்றில் முடியவேண்டு மென்று விதித்திருந்ததால்தான், அப்போது காப் பாற்றப்பட்டான் போலும்! "யாருக்கோ வெறியும் பைத்தியமும் பிடித்து விட்டது!’ என்று ஜேம்ஸ் சுருக்கமாக விமர்சனம் செய்தான். “காவல் படையினர் பீதியடைந்து போய், அகதிகளைக் கைது செய்ய முயல்வதற்குப் பதிலாக அவர்களை இருட்டில் மனம்போனவாறு சுட்டுத் தள்ளிவிட்டார்கள்” என்று தொடர்ந்தான். குழப்பம் ஏதாவது நடக்கிறதாவென்று தேடிய படி அசாய் வீதிகளுள் அலைந்துகொண்டிருந்தான். காயமடைந்த போக்லோ அகதிகளில் சிலர் தப்பி யிருந்தால், அவர்கள் சொந்தக்காரர்களின் வீடுகளில் தான் ஒளிந்துகொண்டிருப்பார்கள். வெய்ச்சோ பெரிய நகரம். டாம்ஷா, போலோ, டுங்வான், மற்றும் சுற்றுவட்டப் பகுதிகளில் சிலகாலம் வசித்து வந்த ஜனங்களில் அநேகம்பேர் இந் நகரத்தில் இருந் தனர். - ஊர்க்காவல் படையின் தலைமையாளரான வாங்காஷியங் சஞ்சலம் அடைந்திருந்தார். சமீபத் தில் ரத்துச் செய்யப்பட்டிருந்த வையாங்ஷியான் மாஜிஸ்டிரேட் அலுவலகக் கட்டடத்தில் அவர் அலுவலகம் இருந்தது. இருபது-முப்பது அகதிகள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலட்சிய_பூமி.pdf/131&oldid=1274884" இலிருந்து மீள்விக்கப்பட்டது