உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலட்சிய பூமி.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அத்தியாயம் 5 சகோதரி ஆங்கெலிகா திடீரென்று ஏற்பட்ட வேலைச் சுமை காரணமாக மிகவும் களைத்து ஆஸ் பத்திரியிலிருந்து திரும்பியபோது, போக்லோ விவ காரம் பற்றி மேற்கொண்டு சில தகவல்களைத் தன் மருகன் ஜேம்ஸிடம் சொன்னள். அவன் காப் பாற்றி உயிருடன் கொண்டு வந்த அந்த அம்மாளுக்கு தலையில் ஒரு ரணம் இருந்தது. அதன் விளைவாக அவள் சுயப் பிரக்ஞை இழந்தாள். ஆனல் அவள் திடீர்ப்பயம் காரணமாகவும் ஊட்டக் குறைச்சல் காரணமாகவும்தான் அதிகப்படியான கஷ்டத்தை அனுபவித்தாள். பாலத்தில் அவள் கிடந்தபோது யாரோ அவளை வலுவாக மிதித்துவிட்டார்கள்; அவ ளுடைய இடது தோளில் அபாயகரமான ஊமைக் காயம் ஏற்பட்டுவிட்டது. மற்றபடி வேறு பலத்த காயம் எதுவும் கிடையாது. அவளுக்குச் சுய நினைவு வந்து, தான் ஆஸ்பத்திரியில் இருந்ததை அறிந்ததும் அவள் தன்னுடைய மாமியாரைப்பற்றியும் குழந்தை யைப் பற்றியும் விசாரித்தாள், உடனேயே ஆற்றில் தூக்கி வீசியெறியப்பட்ட இரண்டு உடல்களைப்பற்றி அநேகர் சிந்தித்தனர். ஆனாலும் அவர்கள் எங்கிருந்: தனர் என்பது பற்றி யாரும் அவளிடம் சொல்ல

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலட்சிய_பூமி.pdf/130&oldid=752690" இலிருந்து மீள்விக்கப்பட்டது