உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலட்சிய பூமி.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

129


"நான் இப்போது புறப்பட வேண்டும். ஏராள மான சம்பவங்கள் தெருக்களிலே நடந்துகொண் டிருக்கின்றன!” அசாய் தன் குல்லாயை எடுத்துக்கொண்டு, அவ் வீட்டை விட்டுத் தாவி வெளியேறினன். அவன் திருப்பி, போய் வருகிறேன் என்று கைகளை ஆட்டி விடை பெற்ருன். ஜேம்ஸ்,"கடவுள் அருள் உனக்கு இருக்கட்டும்!” என்று கைகளை ஆட்டி விடை கொடுத்தான், “சற்று நில்!” என்று சொன்னன். 'என்ன விஷயம்?” என்று கேட்டான் அசாய். ஜேம்ஸ் ஒரு பால் பாயின்ட் பேளுவை எடுத்து அதை அசாயிடம் கொடுத்தான். 'நீ இதை விரும்புவாயல்லவா?” "ஆம், விரும்புவேன். மிகுந்த நன்றி.” அசாய் அதைப் பெற்றுக்கொண்டு, மீண்டும் குதித்துத் தாவிச் சென்ருன். அவன் கண்களில் ஒரு புதிய ஒளி வீசியது. "வெய்ச்சோ நகரை அந்தப் பையனிடமிருந்து ஆண்டவன்தான் காப்பாற்ற வேண்டும்!” என்று ஜேம்ஸ் தன்னுள் எண்ணமிட்டான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலட்சிய_பூமி.pdf/129&oldid=1274883" இலிருந்து மீள்விக்கப்பட்டது