பக்கம்:இலட்சிய பூமி.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

189 ஆனல் அவளை லெய்-வா' என்று பிரிக்காமல், 'லெய்வா' என்று சேர்த்தே அழைத்தார்கள். அவள் நல்ல காரியம் செய்தாள்!-டெங்பிங்கின் மனைவி வெறுப்படைந்து அவனைவிட்டுப் போய் விட்டாள். அவன் அடிக்கடி லெய்வாவின் அன்பையும் ஆதரவையும் தேடினன். புத்தி நுட்பத்துடன் அவ னுக்கு ஆதரவு அளித்தாள் பதிலுக்கு, டெங்பிங்கின் நல்லாதரவையும் பெற்ருள். லெய்வாவிடம் ஆழ்ந்த பிரேமை பூண்டொழுகி ன்ை ஃபான்ஷெக்டின்; அவளை நேசிப்பதை ஒரு போதுமே நிறுத்தினதில்லை. உண்மையான ஆழப் பதிந்த ஒரு பிணைப்பு அவர்களிடையே நிலவியது. அறிவும் குணமும் சம விகிதத்தில் ஒன்று சேர்ந் திருந்த ஒரு மனிதன் என்ற அளவில் அவனை அவள் மதித்தாள். அவர்கள் இருவரும் தப்பிப்பிழைப்ப தற்காக, கம்யூனிஸ்ட் கட்சியை நேசிப்பதாக பாவனை செய்தனர். உண்மையிலேயே, ஃபான் எல்லாவற் றையும்-தனது மூன்று கடைகளையும் ஒரு பெரிய வீட்டையும் இழந்துவிட்டான். அவ்வீட்டின் கீழ்த் தளத்தில் தனக்கென ஒர் அறையை வைத்துக் கொள்ளுவதற்கு மட்டுமே அவன் அனுமதிக்கப் பட்டிருந்தான். குடும்பத்தின் பண்டைப் பொருள்கள் ஒவியங்கள், வெண்கலச் சாமான்கள், பீங்கான் பாண் டங்கள் முதலிய எல்லாம் தேசியமயமாக்கப்பட்டு விட்டன அல்லது அதிசயமான மக்களிடம் 'போய்ச் சேர்ந்துவிட்டன. இந்த உலகத்தில் அவனுக்கென மிஞ்சியிருந்த ஒரே ஒரு திருப்தியும் ஆறுதலும் லெய்வாவின் காதல் ஒன்றுதான்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலட்சிய_பூமி.pdf/139&oldid=752699" இலிருந்து மீள்விக்கப்பட்டது