உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலட்சிய பூமி.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

140


'நான் அறிவு பூர்வமானவன். ஒரு பெண்ணின் காதல்-அன்பு இல்லாமல் என்னல் உயிர்வாழ இயலாது!’-அவன் அப்படித்தான் வியாக்யானம் செய்தான். அறிவு பூர்வமானவன் என்று தன்னைக் குறிப்பிட்டுக்கொண்டதன் மூலம், உயர்வர்க்க பூர்ஷ்வாவின் ரத்தம்கொண்ட, திருத்தமுடியாத ஒரு பூர்ஷ்வாவேதான் என்று அவன் உணர்ந்தான். பையன் அங்கு வந்தான். 'உள்ளே வா, அசாய். சமீபத்திய செய்தி என்ன?’ என்று வினவினன் ஃபான். "தெருக்களில் ஒரு விசேஷமும் கிடையாது. ஒடி ஒளிந்துகொண்டிருப்பவர்களைத் தேடுவதை காவல் படை கைவிட்டுவிட்டது. போக்லோவைச் சேர்ந்த ஒரு ஊர்க் காவல்படையினனை அதே மாவட்டத் தைச்சார்ந்த ஒரு கடைக்காரன் செருப்பால் அடித்து விட்டான். அந்த ஊர்க்காவல் படையைச் சேர்ந்த வனை "நீ உன் ஜாதிப்பெயரை மறந்துபோனயா?” என்று கடைக்காரன் கேட்க, அவன் வெட்கமடைந்து கடைக்குள் சோதனைப்போட நுழையவில்லை!" அன்று காலையில் பாலத்தடியில்.கண்டவைகளை அவர்களுக்குச் சொல்லத் தொடங்கினன் அசாய். லெய்வா ஒரு பன் ரொட்டியை எடுத்து அவ னிடம் நீட்டினள். "நீ பசியுடன் இருப்பாய் என்று எனக்குத் தெரியும். இனி தடுமாருதே. நாங்கள் நடப்புக்களை விவாதித்துக் கொண்டிருக்கிருேம்,' என்ருள். அசாய் புறப்பட முனைந்தான்; பிறகு, தன் னுடைய வழக்கமான பரிசைப்பற்றி அவளிடம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலட்சிய_பூமி.pdf/140&oldid=1274888" இலிருந்து மீள்விக்கப்பட்டது