பக்கம்:இலட்சிய பூமி.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

146


'உன்னைத் தடுப்பதற்கு ஏதுமில்லை. டெங்பிங்கை விட்டுச் செல்வதற்கு நீ கவலைப்பட வேண்டாம்.” "அவலட்சணமான, அகந்தை பிடித்த, சின்ன புத்தி படைத்த ஆள் அவர். அவர் எனக்கு ஒரு பொருட்டல்ல; நிச்சயமாக இல்லை. அவரால் எனக் குச் சில சாதகங்கள் கிடைக்கும். அவ்வளவுதான்' என்ருள் லெய்வா. "அப்படியானுல் ஹாங்காங் போக வேண்டியது தான்! இரண்டாயிரம் டாலர்கள் என்பது ஒரு பெருந் தொகையல்ல. எனக்கு ஒரு மகன் இருக் கிருன். நான் யாருக்கும் இதை தெரிவிக்கவில்லை. அவன் இறந்துவிட்டதாகச் செய்தி அறிவித்து விட்டேன். அவன் அமெரிக்க ஐக்கிய நாடுகளில் இருக்கிருன். அவன் இல்லிய்ைஸ் பட்டதாரி. மெக் காணிக்கல் எஞ்சினியர் அவன். நிரம்பப் பணம் அனுப்புவான் அவன். நேற்றுச் சந்தித்த இந்த வேலைக்காரர் கண்ணியமான ஆளாகத் தான் தோன்றுகிருர். அவரிடம் ஒரு துப்பாக்கி இருக் கிறது. நமக்கு இது ஒரு அரிய சந்தர்ப்பம். அவருக்கு உதவி செய்வதாக நான் தீர்மானம் செய்திருக் கிறேன். ஹாங்காங்கில் அவருக்குத் தொழில் நடக் கிறது. ஆகவே நமக்குக் கட்டாயம் ஒத்தாசை செய்வார். நீ என்ன சொல்கிருய்?" 'எந்தப் பெண்தான் ஹாங்காங் செல்ல ஆசைப் படமாட்டாள்?....மூன்று வருஷமாக எனக்குப் புதிய உடைகள் கிடைக்கவில்லை.” 'உனக்கு ஒரு முத்து அட்டிகை பரிசு தருகிறேன். இது உறுதி.”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலட்சிய_பூமி.pdf/146&oldid=1274893" இலிருந்து மீள்விக்கப்பட்டது