பக்கம்:இலட்சிய பூமி.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

145


பாத்திரம் பண்டங்கள் எல்லாம் பறிமுதல் செய்யப் பட்டுவிடும். தன் சொந்த உணவைச் சமைக்கக்கூட யாரும் அனுமதிக்கப்பட மாட்டார்கள். இரண்டரை லட்சம் ஜனங்களுக்கு எண்ணெய், மாமிசம், சாமான் விநியோக வண்டி வசதி போன்ற எதுவுமில்லாமல் மதிய உணவு, சிற்றுண்டி சமைத்துப் பரிமாற வேண் டும்!-எவ்வளவு வேடிக்கையான யோசனை, பார்த் தாயா?....சற்று யோசித்துப்பார்; காய்கறிகள் தாமத மாக விநியோகிக்கப்பட்டாலோ, அல்லது வராமல் இருந்துவிட்டாலோ, நிலைமை என்ன ஆகும்? நகரத் தின் பூரா ஜனத்தொகைக்கும் சமையல் செய்ய வேண்டுமென்று கட்சி விரும்புகிறது. சரி, சமைப் பதற்கு ஒன்றும் இல்லாவிட்டால், என்ன ஆவது? அது சம்பந்தமாகக் கவனித்து ஆவன செய்ய வேண்டுமென்று முடிவு செய்திருக்கிருர் டெங்பிங். பிறர் பாவங்களையும் பழிகளையும் சுமந்து நிற்கும் பலி ஆடாக யாரோ ஒருவன் இதற்கெல்லாம் பயன் படுத்தப்படப் போகிருன். ஆனல் நான் அல்ல!” ஃபான் மெல்லிய தொனியில் பேச ஆரம்பித் தான்: "அந்த ஆங்கிலேயன் ஹாங்காங்குக்குத் தப்பிச் செல்லத் திட்டம் போட்டிருக்கிருன், நானும் அவனுடன் போகிறேன்.” "ஹாங்காங்கில் உங்களுக்கு இரண்டாயிரம் அமெரிக்க டாலர் கிடைத்ததாகச் சொன்னீர்களே!” "ஆமாம்; என்னுடன் வா." 'ஹாங்காங்குக்கா?....அம்மம்ம அந்த எண்ணம் தேய்வதற்காக ஒரு கணம் இடைவேளை கொடுத்தான் ஃபான். 发参 l

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலட்சிய_பூமி.pdf/145&oldid=1274892" இலிருந்து மீள்விக்கப்பட்டது