உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலட்சிய பூமி.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

144


அவர்கள் உயர்வாக மதித்தார்கள். லெய்வாவின் ஆதாரவாளன் என்ற வகையில், ஃபானிடம் அசாய்க்கு மிகுந்த மரியாதை பெருகியிருந்தது; மனத்தை எரிக்கும் ரீதியில் அவன் அவ்வப்போது குறிப்பிட்டுவந்த சில விஷயங்களும் இதற்குக் காரணம் ஆகும். மதி நுட்பத்துடன் பேசும் ஒரே மனிதன் அவன் என்றும் அசாய்க்குத் தோன்றினன். ஃபான் பேசத் தொடங்கினன்: "நான் உன்னிடம் சொல்லிக்கொண்டிருந்தாற் போல, வேண்டிய அளவுக்கு நான் எல்லாம் அனுப வித்துவிட்டேன். ஒரு மனிதனுக்குப் பிழைப்பதற்கு இது உகந்த வழியன்று, சீக்கிரமோ அல்லது காலந் தாழ்த்தியோ, அவர்கள் என்னைத் தெரிந்துகொண்டு விடுவார்கள்! இந்தத் துப்பாக்கிப் பிரயோகம், கிளர்ச்சி போன்றவை டெங்பிங்குச் சாதகமாயிராது ஏராளமானபேர் அழிக்கப்பட்டனர்; பலர் இரவோடு இரவாக மறைந்துவிட்டனர். உணவுச் சாலைகளில் ஒன்றை நான் பொறுப்பேற்று நடத்தமுடியுமா வென்று அவர் என்னிடம் கேட்டார்.” “என்னிடமும் கேட்டார் அவர்,” என்ருள் லெய்வா. "பொதுஜன உபயோகத்திற்கென முப்பது உணவு விடுதிகள் ஏற்படப் போகின்றனவாம்; எனக் குச் சொன்னர்கள். எண்ணுயிரம் அல்லது எண்ப தாயிரம் பேர்களுக்கு பதில் சொல்லியாகவேண்டிய ஒரு சமையற்கூடத்தை எப்படி மேற்பார்வையிட்டு, எல்லோருக்கும் பன்னிரண்டரை மணிக்குக் கச்சித மாக எப்படி உணவு பரிமாற முடியும்? வாணலிகள்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலட்சிய_பூமி.pdf/144&oldid=1274891" இலிருந்து மீள்விக்கப்பட்டது