உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலட்சிய பூமி.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

148 சட்டைப் பைகளில் நுழைத்தவண்ணம் சிறிய முற்றத்தின் வழியாக நிதானமாக ந ட ந் து சென்ருன். பையன் அங்கிருந்து சென்றதும் : 'நீங்கள் அவனிடம் எல்லாச் சங்கதியையும் சொல்லாமல் இருந்தது கண்டு நான் மகிழ்ச்சியடை கிறேன்” என்ருள் லெய்வா. அசாய், கட்சி உறுப்பினகை இருக்க முடியாத அளவுக்கு சிறுவனுக இருந்தான் என்பது உண்மை தான் என்ருலும்கூட அவன் தீவிரமாக ஓர் உழைப் பாளி. லெய்வாவும் கட்சி உறுப்பினள். அவ்வாறே ஃபானும் ஓர் உறுப்பினனுக இருந்தான்.பத்திரிகைத் தொழில் சம்பந்தப்பட்ட அலுவலகத்தில் அவனுக் கென்று ஒர் இடம் இருந்தது. இதெல்லாம் ஐந்து எதிர்ப்பு இயக்கத்தின் போது முப்பதாயிரம் டாலர் கொடுத்துத் தன் னுடைய சுதந்திரத்தை விலைக்கு வாங்கியபிறகு ஏற்பட்டவை. அவனுடைய அந்தஸ்துக்கு ஏற்ப மாதம் மூன்று பவுண்டு மாமிசமும் ஒரு பவுண்டு எண்ணெயும் கிடைத்தன. (இந்த அளவு அவ்வப் போது மாறியது) பொது ஜனங்களுக்கு மாதத்திற்கு மூன்று அவுன்ஸ் இறைச்சிதான். பொதுவுடமை வாதியின் குறியீட்டுச் சொல் அகராதிப்படி பொருத் தமாகச் சொன்னல் ஃபான் ஒரு சந்தர்ப்பவாதி'! கம்யூனிஸ்ட் ஆட்சி முறையில் அவர்கள் மூவரும் சிறப்பாக பணிசெய்தார்கள். தனிப்பட்ட முறையில் நெருக்கமான ஒரு விசுவாசம் அவர்களுக்குஇருந்தது. கட்சியின்பால் உள்ள விசுவாசத்தைவிட இதையே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலட்சிய_பூமி.pdf/143&oldid=752704" இலிருந்து மீள்விக்கப்பட்டது