உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலட்சிய பூமி.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

142


"அவருக்குச் சொந்தமான துப்பாக்கி ஒன்று கட்சி அலுவலகத்தில் இருக்கிறது. வாலிபர் கூட் டுறவு சங்கத்தின் தலைவர் என்ற முறையில் டெங்பிங்கின் அலுவலகத்திற்குப் பின்னல் உள்ள ஒலிபரப்பு அறைக்குச் செல்ல உனக்கு வழி கிட்டும். அந்தத் துப்பாக்கி எங்கே இருக்கிறதென்று கண்டு பிடி; டெங்பிங் சாப்பாட்டுக்கு வெளியே போன வுடன், நீ அதைத் திருடிக்கொண்டு வந்துவிடு. ரொம்பவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்; உன் செயலை வேறு யாரும் பார்த்துவிடலாகாது!” 'பார்வைக்குத் தெரியும்படி அது எங்கு இருந் தாலும், என் கண்களில் படாமல் போகாது! என் கண்களை உபயோகிக்கிறேன்!” "அத்துடன் உன் மூளையையும் உபயோகப் படுத்திக்கொள். நீ எதையும் வெளியில் விட்டுவிடக் கூடாது!” "அந்தத் துப்பாக்கி உங்களுக்கு எதற்கு?” 'நகரத்தில் குழப்பம் விளையப்போகிறதென்று நீ நினைக்கவில்லையா?" - 'குழப்பமா?” நினைத்தமாத்திரத்திலேயே அவன் கோபத்தால் பொங்கின்ை. "குழப்பம் ஏற்படுமென்று நான் சொல்கிறேன். ஆனல் நீ என்னைக் கேள்விகள் கேட்கக்கூடாது. யாரிடமும் இதுபற்றிச் சொல்லவும் கூடாது!" "அலுவகத்தில் அது இருந்தால், உடனேயே வேலை முடிந்துவிடும்!" என்ருன் அசாய், சுய திருப்தி யுடன் செயற்படுவதற்குத் தனக்கு ஏதோ விஷயம் கிட்டிவிட்டதில், மகிழ்ந்தான் அவன். தன் கைகளைச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலட்சிய_பூமி.pdf/142&oldid=1274890" இலிருந்து மீள்விக்கப்பட்டது