உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலட்சிய பூமி.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கொதிநீரை பாத்திரத்தில் ஊற்றிள்ை; அப் பாத்திரத்தை உள்ளே எடுத்துச் செல்லுமுன் ஒரு கணம் அவன் கையைப் பிடித்துக் கொண்டாள்; கள்ளத்தனமான முத்தம் ஒன்றை அவனுக்குக் கொடுத்தாள் அவள். தேநீர்க் கோப்பையை முதலில் தன் தந்தைக்கும் அடுத்து ஸிஸ்டர் ஆங்கெலிகாவுக்கும், பிறகு ஜேம்ஸ்ாக்கும் கொடுத்தாள். ஆங்கெலிகா பெருமை யுடன் நடப்பதைக் கவனித்துக்கொண்டிருந்தாள்; இதுவரை ஜேம்ஸ் சொன்னதெல்லாம் உண்மை யாகவே பலித்துவிடுமென்று அதிசயப்பட்டாள்; காதலர்கள் இருவரும் அடுத்த வாரத்தில் ஹாங் காங்கில் மறுபடியும் கூடிவிடுவார்கள் என்றும் அவள் யோசித்துக்கொண்டிருந்தாள். "பையன் வருவதானுல், சமையலறைக் கதவைத் திறந்தே வைக்கிறேன்.” என்ருள் அவள். 'விதிகளில் மக்கள் கூட்டங்கள் ஊர்வலம் போய்க்கொண்டிருந்ததை நாங்கள் பார்த்தோம். அதனல்தான் நாங்கள் வர தாமதமாகியது' என்று. விவரம் தெரிவித்தாள் ஈஸு. 'அது அவ்வளவு சுமுகமாகத் தோன்றவில்லை. வேடிக்கை பார்த்தவர்களிடம் கேட்டேன். இவர் களெல்லாம் போக்லோ மக்களென்றும் தங்கள் உற வினர்கள் கைதுசெய்யப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரி விக்கப் போய்க்கொண்டிருக்கிருர்களென்றும் சொன் ஞர்கள். அவர்கள் வெயாங்ஹியான் மாஜிஸ்டிரேட் ஹாலை நோக்கி மோதிக்கொண்டிருந்தார்கள்.” என்ருன் டுவான், • ,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலட்சிய_பூமி.pdf/157&oldid=752719" இலிருந்து மீள்விக்கப்பட்டது