பக்கம்:இலட்சிய பூமி.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

159


தெரிவித்திருக்கிருள். உங்களிடம் நிலை மை யை விளக்கி உங்கள் சகாயத்தைப் பெறவேண்டும்.இன்று என்னுடைய ஒரே குழந்தையாக ஈஸ் மட்டுமே இருக்கிருள். அவள் புறப்பட்டுப்போனல், என்னிடம் என் பேரன் மாத்திரம் தான் இருப்பான்.” அவன் என்ன சொல்லப் போகிருன் என்பதை யும், டுவான் அச்செய்தியைத் தன்னிடம் மரியாதைக் கென நேரிடையாகவே சொல்ல விரும்புகிருன் என் பதையும் ஜேம்ஸ் அறிந்திருந்தான். அவள் தந்தை தொடரவேண்டுமென்று விரும்பிய பாவனையில் அவன் ஈஸுவை நோக்கினன். 'ஈஸாவும் மிகுந்த வேதனையடைந்திருக்கிருள் எனக்கு இரண்டு புதல்வர்கள் இருந்தார்கள் என்று நான் சொன்னல், நீங்கள் அநேகமாக அதை நல்ல விதமாகப் புரிந்துகொள்ளக் கூடும். மூத்தவன் ஒரு டாக்டர். அவன் கொரியா யுத்தத்தில் கொல்லப் பட்டான். இரண்டாம் மகன் ஒரு எஞ்சினியர். அவன் கிரினில் விபத்தொன்றில் சாகடிக்கப் பட்டான். இரண்டு வருடங்களுக்குமுன் முதிய பிராயத்தைச் செளகரியத்துடன் கழிக்க வேண்டு மென்று உரிமையுடன் நான் ஆசைப்பட்டேன். ஆனல், எல்லாம் மாறிவிட்டன.ஆம்; நான் தோற் கடிக்கப்பட்ட-சோர்வடைந்த மனிதன்!” கிழவனல் மேற்கொண்டு தொடர முடியவில்லை. 'மிகச் சிறப்பாகப் படித்துத் தேர்ந்த குடும்பத் தைச் சேர்ந்தவர் மிஸ்டர் டுவான். அவரது இரண் டாவது மகன் மாண்டது அவருக்கு ஒரு பெரிய அடி" என்ருள் ஸிஸ்டர் ஆங்கெலிகா,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலட்சிய_பூமி.pdf/159&oldid=1274903" இலிருந்து மீள்விக்கப்பட்டது