பக்கம்:இலட்சிய பூமி.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

168


"ஆம்; ஒவ்வொன்றுக்கும் கட்சி மீதுதான் குற்றம் சாட்டவேண்டும். ஏனென்ருல், நமது வாழ்க் கையை எல்லா வகையிலும், கட்சி'தானே கட்டுப் படுத்துகின்றது.” - "உங்களுடைய சாமான்களையெல்லாம் மூட்டை கட்டுங்கள்; ஃபானுடன் தொடர்பு வைத்திருங்கள்” என்ருன் ஜேம்ஸ் கிழவர் டுவானிடம். ஜேம்ஸ் தன் அத்தையின் பக்கமாகத் தலையைச் சாய்த்து, "நாங்கள் திடுதிப்பென்று புறப்படவேண்டி யிருக்கும். நீங்கள் நாளைக்குப் புறப்படவேண்டும்” என்று கூறினன். "நீ என்ன செய்யப் போகிருய்?” "நான் உங்களை ஸ்டேஷனுக்கு அழைத்துச் செல்லவேண்டும். நீங்கள் நகரத்தைவிட்டு அவசர மாகப் புறப்பட விரும்புவதாகவும், உங்களது கனமான மூட்டை முடிச்சுக்களை நான் கவனித்து எடுத்துக்கொண்டு அடுத்த ரெயிலில் புறப்பட்டு விடுவதாகவும் அங்கே அறிவித்து விடுவேன்.” எதிர்பார்த்தபடி, ஆஸ்பத்திரியிலிருந்து ஸிஸ்டர் ஆங்கெலிகாவுக்கும் ஈஸுவுக்கும் அழைப்பு வந்தது. தாத்தாவும் பேரனும், ஜேம்ஸை வீட்டில்தனித் திருக்கச் செய்துவிட்டு, விடைபெற்றுச் சென்ருர்கள். 'இப்பொழுது நீ வீட்டைவிட்டு வெளியே நகராதே" விஸ்டர் ஆங்கெலிகா மருத்துவ மனைக் குப்புறப்பட்டபோது மருகனை எச்சரித்தாள் ஈஸு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலட்சிய_பூமி.pdf/168&oldid=1274909" இலிருந்து மீள்விக்கப்பட்டது