உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலட்சிய பூமி.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

170


கிளர்ந்தெழுந்தனர், எப்படியோ ஒரு வகையில் தப்பிவிடுவதற்கான வழியைத் தேடிக் கொண்டிருந் தார்கள்! திட்டமோ, காரணமோ இல்லாமல், முன் யோசனையற்ற நிலையில் ஜனங்கள் இந்தக் கலகத்தில் இறங்கியிருந்தார்கள் என்பதை அவர்கள் மட்டும் அறிந்தார்கள். மக்களில் சிலர் பின்னடைந்தனர்; ஆனல் அவர் களுள் சிலர் அங்கு என்ன நடக்கப் போகிறதென் பதை அறிய விரும்பிக் கூட்டத்துடன் திரும்பவும் சேர்ந்து கொண்டார்கள். காவல்படையின் எதிர்ப்பு எவ்விதத்திலும் இல்லாமல் போகவே, கூட்டத்தினர் உற்சாகத்துடன் விடுமுறை நாட்களில் காணப்படும் சுதந்தர உணர்வுடன் விரைந்தனர். இம்மாதிரி சுதந்திரத்தைக் கடந்த பத்தாண்டுகளில் அவர்கள் கண்டதே இல்லை. - சந்தைப் பகுதியில் மக்களின் கூட்டம் உணர்ச்சி வசப்பட்டு ஆரவாரம் செய்து கொண்டிருந்ததைப் பார்த்தான் அசாய். ஊர்வலம் நின்றுவிட்டது, பல கடைகள் சூறையாடப்பட்டன. கொள்ளையடித்தவர் களுக்கு மாவு, அரிசி மூட்டைகளுடன் எண்ணெயும் உதவின. யாரோ ஒருவன் தற்செயலாகவோ அல்லது திட்டமிட்டோ தீக்குச்சியைக் கிழித்துப் போட்டிருந்தான்; கனமான கறுப்புப் புகை ஓர் எண்ணெய்க் கடையிலிருந்து கிளம்பியது: பயங்கரக் கதறல்களுக்கும் வெறிகொண்ட பேய்ச் சிரிப்புக்கும் மத்தியில் பயங்கர தி ஜ்வாலைகள் வீட்டைச் சூழ்ந்து விழுங்கியது. - -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலட்சிய_பூமி.pdf/170&oldid=1274910" இலிருந்து மீள்விக்கப்பட்டது