உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலட்சிய பூமி.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

172


"முன்ளுேக்கிச் செல்லுங்கள்....எங்களைக் கொல் லுங்கள்!” என்று ஒருவன் கூச்சல் போட்டான். சார்ஜன்ட் எதையாவது செய்துவிடுவதற்கு முன்னே, அந்தக் கிழவன் வந்து அவனுடைய துப் பாக்கியின் வாய்ப்பாகத்தை மென்மையாக வேறு பக்கம் சாய்த்துவிட்டு 'ஊஹல்ம், நீங்கள் அதைச் செய்யப்போவதில்லை” என்று சொன்னன். சார்ஜன்ட் தன் துப்பாக்கியை மெதுவாகத் தரையை நோக்கி இறக்கினன். கோபம் கொண்ட கூட்டம் இப்போது மற்ற காவல் படைகளைத் தோற்கடித்தது; வாசலை மோதி நொறுக்கியவாறு பெருங்கூச்சலிட்டு ஆரவாரம் செய்துகொண்டு உள்ளே நுழைந்தது. உள்ளே காவல் படையினர் தங்கள் உயிர்களைக் காப்பாற்றிக் கொள்ள ஓட்டம் பிடித்தனர். துப்பாக்கி வெடித்த சத்தம் படீரென்று கூர்மை யாக ஒலித்ததை அசாய் கேட்டான். அங்கிருந்து கிழக்கே ஐம்பது கஜ தூரத்திலிருந்த பொது வுடைமை புனர் நிர்மாண விநியோகக் கிடங்கி" லிருந்து மற்ருெரு வெடிச் சத்தம் தெளிவாகக் கேட்டது. - - - அசாய் மறுபடியும் குதித்துத் தாவி வெளியேறி ஞன். கலகக் கும்பலின் பெரும் பகுதி விநியோகக் கிடங்கை நோக்கி விரைந்தது; குழப்பம் அங்கு தான் நிலவியது. துப்பாக்கிக் குண்டுகள் ஆகாய வெளியில் வெடிக்கப்பட்டன. கூட்டத்திலிருந்த ஜனங்கள் அச்சத்தை உதறிவிட்டு கிளர்த்தெழுந்த னர்; தங்களுக்குத் தேவைப்பட்ட சர்க்கரை, எண்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலட்சிய_பூமி.pdf/172&oldid=1274912" இலிருந்து மீள்விக்கப்பட்டது