உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலட்சிய பூமி.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

173


ணெய், டப்பாக்களில் அடைக்கப்பட்ட பொருள்கள் சிகரெட், மாவு, பழம், காய்கறிகள் இவையெல்லா வற்றுக்கும் மேலே அரிசி ஆகியவைகளைப்பற்றி நன்ருக உணர்ந்து கொண்டிருந்தார்கள். கப்பலில் ஏற்றப்படுவதற்காக அரிசி டன் கணக்கில் சேமித்து வைக்கப்பட்டிருந்தது. மற்ற அரிசிச் சாக்குகள், சோவியத்யூனியனுக்குச் செல்லும் வழியில் ஹாங் காங்கில் சேர்ப்பிக்கப்படுவதற்காக அடையாளக் குறி இடப்பட்டு, தற்காலிகமான சிறு வீடுகளின் கொல்லைப்புறங்களில் அடுக்கப்பட்டிருந்தன. அக்கட்டிடத்தின் வலது பக்கமாக அசாய் பாய்ந்து சென்ருன். அங்கு அவனை எல்லோருக்கும் தெரியும். "கவனியுங்கள் அவர்களுடைய துப்பாக்கி களை அப்புறப்படுத்திவிட்டு, அவர்களைக் கட்டிப் போடுங்கள்!” என்று அவன் கூச்சலிட்டான். இளைஞர்கள் சிலர் மகிழ்ச்சியுடன் செயற்பட தயாராயினர். அவர்கள் விரைந்து சென்று, காவ லர்களின் ஆயுதங்களை அப்புறப்படுத்திவிட்டு அவர் களின் கைகளை பின்புறம் சேர்த்துக் கட்டிப்போட்ட னர். அவர்கள் ஆதரவற்று விடப்பட்டனர்; புழுப் போல நெளிந்து கொண்டிருந்தனர். கட்டிப் போடப்பட்டிருந்த காப்பாளன் ஒருவன் வாலிபர் கூட்டுறவுச் சங்கத் தலைவனை அடையாளம் கண்டு கொண்டான். 'நீ கூடவா?" என்று கேட்டான். "ஆமாம்: நான்கூடத்தான்!” தங்களது பொதுப்படையான குறிக்கோளை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலட்சிய_பூமி.pdf/173&oldid=1274913" இலிருந்து மீள்விக்கப்பட்டது