பக்கம்:இலட்சிய பூமி.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1' 4 லாம் ஒன்று சேரக் குவிந்து கொண்டிருந்தன. அவர் களைப் பற்றி யாரும் கவலை கொள்ளாமல் போக்லோ தலைவர்கள் விடுவிக்கப்பட்ட தங்களது உறவினர் களுடன் வீட்டுக்குப் போய்விட்டார்கள். அசாயின் தலை கிறுகிறுத்தது; வாசலுக்கு வந்து அங்கே நின்ருன்; பெண்கள் சிலர் தலைகளில் முட்டைகோசு களைச் சுமந்தவண்ணம் வந்து கொண்டிருந்தனர்! மற்றவர்கள் தங்களுடைய சுருட்டிவைக்கப்பட் டிருந்த மேலங்கிகளில் விலைமதிப்புள்ள அரிசியையும் டப்பாக்களில் அடைக்கப்பட்ட பொருள்களையும் துரக்கிச் சென்றுகொண்டிருந்தார்கள். ஆடவர்கள் தங்கள் தோள்களில் அரிசி மூட்டைகளைச் சுமந்து சென்றனர். கூச்சலிட்டுக் கத்தியபடி ஒருவரை யொருவர் நசுக்கிக்கொண்டும் ஒருவர்மீதொருவர் இடித்துத் தள்ளிக்கொண்டும் மெள்ள மெள்ளச் சென்றுகொண்டிருந்த மகிழ்ச்சி மிக்க ஆண்கள், பெண்கள், குழந்தைகளின் கூட்டத்துக்கு மத்தியில் மிதிபட்ட காய் கறிகள். ஆரஞ்சுப் பழங்கள், கிள்ளப்பட்ட கறுப்பு அவரைக்காய்கள், சர்க்கரை அரிசி முதலியன த ரை ெய ங் கு ம் சிதறிக் கிடந்தது. - - "வாருங்கள், உங்களுக்குத் தேவையானதை அள்ளிக்கொள்ளுங்கள். டப்பாக்களில் அடைக்கப் பட்டிருக்கும் சாமான்கள், சர்க்கரை, அரிசி எல்லாம் இருக்கின்றன. வேண்டுமென்பதை எடுத்து ப் போங்கள்!" என்று அசாய் வாசலில் நின்று சத்தம் 翰、 அப்பொழுதுபோன் வாசலில் தோன்றின்ை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலட்சிய_பூமி.pdf/174&oldid=752738" இலிருந்து மீள்விக்கப்பட்டது