பக்கம்:இலட்சிய பூமி.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

176


தொப்பிகளுடனும் தோள்களில் துப்பாக்கிகளுட னும் அணிவகுத்துக் காலடி போட்டு நடந்து சென்று கொண்டிருந்தார்கள். - "படைவீரர்கள் படைவீரர்கள்!” என்று குரல் எழுந்ததுதான் தாமதம், அத்தனை கூட்டமும் கிடங் கின் சுற்று மதிலை விட்டு கண்டபடி ஒடத் தலைப் பட்டது; அவர்கள் எவ்வளவு வேகமாகக் கூடினர் களோ அவ்வளவு வேகமாகக் கலைந்தும் விட்டனர். "இந்த கூட்டத்தில் நீயும் கலந்துவிடக்கூடாது. நீ இப்படி வா,” என்று அசாயை அப்பால் இழுத்துக் கொண்டே சொன்னன். ஃபான். அவனுக்கு மிகவும் பழக்கமான அப்பகுதியின் மூலையை நோக்கி அசாய் விரைந்ததை ஃபான்கண்டான். அன்றிரவு, டுவான் அண்டை அயலில் இருந்த வர்களிடமிருந்து, கட்சி அலுவலகம் தீப்பற்றி எரிந் ததைப்பற்றியும் விநியோகக் கிடங்கு கொள்ளையடிக் கப்பட்டதைப் பற்றியும் அறிந்தான். கொள்ளையடிக்கப்பட்ட பொருள்களை அள்ளிக் கொண்டதாகவோ, அல்லது காவ ல ர் க ள் சம்பந்தமாக ஏற்பட்ட கலவரத்தில் பங்குபெற்ற தாகவோ ஒருவரும் ஒப்புக்கொள்ளமாட்டார்கள். ஜனங்கள், தங்கள் வெறி அடங்கியதும் மேற்படி கலகத்தின் விளைவு என்ன ஆகுமோ என்ற அச்சத் திலுைம் பீதியிலுைம் மனங்குழம்பி இருந்தார்கள். "என்ன நடக்கப் போகிறது?’ என்னும் கேள்விதான் ஒவ்வொருவரது உதடுகளிலும் இருந்தது. ஊர்க் காவல் படையினர் ரோந்து சுற்றுவதற்காக தெருக் களில் இருவர்.இருவராகத் திரும்பவும் தோன்றினர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலட்சிய_பூமி.pdf/176&oldid=1274915" இலிருந்து மீள்விக்கப்பட்டது