பக்கம்:இலட்சிய பூமி.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

177


மிச்சம் மீதம் கிடந்ததை அழித்துக்கொண்டு, கிடங் கின் வலது பக்கம் தீபரவியது. எரிந்துகொண்டிருந்த உரத்தினின்றும் கிளம்பிய துர்நாற்றம் சகிக்க முடி யாததாக இருந்தது. ஃபான் டுவானின் வீட்டிற்குள் விரைந்து சென்று, ஒரு நாற்காலியை இழுத்துப் போட் டுக்கொண்டு அதில், பொத் தென்று அமர்ந்தான். ஒரு கோப்பைத் தேநீர் வேண்டுமென்ருன். பிறகு தேநீருக்காகக் காத்திருக்காமல் அவசரமாக அவன் பேச ஆரம்பித்தான்; அப்போது மூக்குக் கண்ணுடிகளுக்குள் அவன் கண்கள் ஒளி வீசின. முன் நெற்றிவழவழப்பாகவும் விறைப்பாகவும் இருந் தது. அவனது மேதாவிலாசத் தோற்றம் மறைந்து செயலுக்குரிய விழிப்புடன் கூடிய முரடன்போல் இருந்தான் அவன். "தெருக்கள் அமைதியாக இருக்கின்றன. மக்கள் இனி மேற்கொண்டு எவ்விதத் தொல்லையையும் விரும்பமாட்டார்களென்பதற்காக, உத்தரவு புதுப் விக்கப்பட்டது. நகரம், தலைவன் இல்லாமல் இருக் கின்றது. போலீஸ் தலைமை அதிகாரி ராஜிநாமா செய்துவிட்டு, தாய்நாடு சென்றுவிட்டார். டெங்பிங் கைக் கண்டுபிடிக்க முடியாது, இராணுவ வீரர்கள் போக்லோவிலிருந்து திரும்பி வந்துகொண்டிருக் கிருர்கள். ஒரு நூறு படைகளுடன் இந்த நகரத்தின் பொறுப்பை ஏற்க யாராவது விரும்பினால் இன் றிரவே அவ்வாறு செய்யலாம்." இடையீடு இல்லாமல் அவன் மேலும் தொடர்ந் தான்; "வெய்சோ நகரம் இம்மாதிரியான ஒரு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலட்சிய_பூமி.pdf/177&oldid=1274916" இலிருந்து மீள்விக்கப்பட்டது