உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலட்சிய பூமி.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

178


தினத்தை தரிசிக்குமென்று ஒருபோதும் எண்ண வில்லை. நமக்குக் கிடைத்திருக்கக்கூடிய அற்புதமான சந்தர்ப்பம் இது. நாம் நகரத்தை விட்டு நாளைக்கே புறப்பட வேண்டும்.” - - "மிஸ்டர் டாய்க்குத் தெரிவித்துவிட்டீர்களா?" என்று உணர்ச்சிவசப்பட்டு நடுக்கத்தோடு கேட்டாள் f← ©yTF. 'உங்கள் மூலம் அவருக்குத் தகவல் அனுப்ப வேண்டுமென்றிருந்தேன். பலர் நா ளை யதி ன ம் நகரத்தைவிட்டுப் புறப்படுவார்கள். சிலர் எல்லை யைக் கடக்க முயற்சி செய்வார்களென்றும் யூகிக் கிறேன்-போக்லோ தலைவர்களில் சிலரும், தப்பிய கைதிகளும்தான் இவர்கள். திரும்பிச் செல்வதற்கு அவர்களுக்கு வீடுவாசல் இல்லை; ஆகவே அவர்கள் வெளியேறித்தான்.ஆகவேண்டும்.இல்லையேல் மாமூல் பிரகாரம் அத் தலைவர்கள் வளைத்துப் பிடிக்கப்பட்டு வடக்கே அனுப்பப்பட்டு விடுவார்கள். 'உத்தரவு புதுப்பிக்கப்பட்டது; குற்றவாளிகள் தண்டிக்கப்பட் டார்கள், மக்கள் வேலைக்குப் போகவேண்டும்'இது வழக்கமான சங்கதிதானே! செய்தி மிஸ்டர் டாய் க்கு உடனடியாக எட்டிவிடவேண்டும்,' என்ருன் ஃபான். "நான் போய்ச் சொல்லுகிறேன். இன்றிரவு அவர்கள் அவ்வளவு உன்னிப்பாகப் பார்த்துக் கொண்டிருக்கமாட்டார்கள்” என்ருன் டுவான், "நான் அதைச் செய்கிறேன், ஆஸ்பத்திரி வழி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலட்சிய_பூமி.pdf/178&oldid=1274917" இலிருந்து மீள்விக்கப்பட்டது