உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலட்சிய பூமி.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

io9 'நல்லது, கான்டன்-கோவ்லூன் ரயிலோடு இணைப்புப் பெறும் வண்ணம் ஸிஸ்டர் ஆங்கெலிகா நாளைக்கு வெகு சீக்கிரமாக ரயிலில் புறப்பட வேண் டும், உங்கள் நண்பர் டாய் அந்த அம்மணியின் மூட்டை முடிச்சுகள் காரணமாக, அடுத்துப் புறப் படும் ரெயிலில் கிளம்பப் போவதாகப் பாவனை’ செய்வார்! அருமையான காரணம். பொதுவாக உள்ள குழப்பங்கள் காரணமாக எவ்வளவு துரித மாக முடியுமோ அவ்வளவு துரிதமாக வெளியேறி விட விரும்புகிருள் அந்த வயதான அம்மணி.” ஃபானின் வார்த்தைகள் தெளிவாகவும் கச்சித மாகவும் இருந்தன. தொடர்ந்து பேசினன்; "மூட்டை முடிச்சுக்களை சேகரம் செய்து கட்டுவதில் சுறுசுறுப்பாக இருப்பதுபோல பாவனை செய்து கொண்டு அவர் தன் வீட்டில் இருட்டும் வரை தங்கி யிருக்க வேண்டும். லங்காங்குக்கு நம்மை ஏற்றிச் செல்வதற்கு ஒரு பஸ் டிரைவரிடம் ஏற்பாடுகள் செய்துள்ளேன். உங்களோடு நான் வருகிறேன். நம் பிரயாணத்துக்கு வேண்டிய தஸ்தாவேஜுகளைத் தயார்ப்படுத்துவதற்கு நாளேப்பொழுது முழுவதும் கழிந்துவிடும். நகரத்திலிருந்து நாம் பஸ்ஸில் ஏறிச் செல்ல முடியாது. நகரத்தின் மேற்கே உள்ள சாய்சாம் தெருவை அடைந்து, கிராமத்தின் குறுக்கே சென்று, வெளியே இருக்கும் பஸ் நிறுத்தீ தில் நாம் பஸ்ஸை பிடிக்கவேண்டும்." 'ஆல்ை, முதலில் ஜேம்ஸ் நம்மோடு வந்து சேர்ந்துவிட வேண்டும். அவருக்கு சாய்சாம் தெரு எங்கேயிருக்கிறதென்று தெரியாதே'

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலட்சிய_பூமி.pdf/179&oldid=752743" இலிருந்து மீள்விக்கப்பட்டது