உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலட்சிய பூமி.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

180


"அது உண்மைதான். ஒரு பிரிவாக நீங்கள் சேர்ந்து புறப்பட வேண்டியிருக்கும். நான் கவனிக்க வேண்டிய விஷயங்கள் இன்னும் இருக்கின் றன. மி ஸ் டர் டுவான், நீங்க ள் நாளை இரவு அவருடன் இங்கே தொடர்ந்து வந்துவிட லாம். பொழுது போக்கிற்காக நடந்து வருபவர் போலத் தோன்றும்படி கொஞ்ச துரம் எட்டியிருந்தே அவர் உங்களைத் தொடரட்டும். ஞாபகம் இருக்கட்டும். நீங்கள் எல்லோரும் பிங்ஷான் குடியானவர்கள் மாதிரி உடை அணிந் திருக்க வேண்டும்.” 'பஸ்ஸில் நமக்கு இடம் கிடைக்கவில்லையாளுல் என்ன செய்வது?" என்று வினவினுள் ஈஸ்". - 'பஸ் டிரைவரும் நானும் நெருங்கிய சிநேகிதர் கள். நாங்கள் தொழிலில் சேர்ந்தே இருக்கிருேம். ஒரு தடவை பிரயாணத்துக்கு அவனுக்கு ஹாங் காங் டாலர்கள் ஐம்பது ஊதியம் கொடுத்துக் கொண்டிருக்கிறேன்; அவனுக்கு அது ஏறக்குறைய ஒரு மாதச் சம்பளம், கட்சி ஆட்களால் ஐந்தாறு இடங்கள் ரிசர்வ் செய்யப்பட்டிருப்பதாக அவன் கூறுவான். ஏற்கெனவே அவன் இம்மாதிரி நம்பிக் கையுடன் நடந்திருக்கிருன்!” டுவான் பெருமூச்சு விட்டான். 'இப்போதுதான் ஞாபகம் வருகிறது. உங்கள் உதவிக்காக அவர் எவ்வளவு ஊதியம் கொடுக்க வேண்டுமென்று மிஸ்டர் டாய் கேட்டுக்கொண்டிருந் தார். உங்களைக் கேட்டுச் சொல்லுவதாக அவரிடம் தெரிவித்தேன்" என்ருள் ஈஸா,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலட்சிய_பூமி.pdf/180&oldid=1274918" இலிருந்து மீள்விக்கப்பட்டது