உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலட்சிய பூமி.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

181


'நான் அதைப் பொருட்படுத்தமாட்டேன்!” ஃபானின் பழைய மாண்டரின் வழக்கங்கள் சில மீண்டும் வந்தன. - 'நீங்கள் சொல்லத்தான் வேண்டும்.” 'ஊஹல்ம். நானும் உங்கள் தந்தையும் நெடு நாளைய சிநேகிதர்கள். நான் இப்போது உங்கள் நண்பரான ஜேம்ஸுக்கு மட்டும் உதவி செய்ய வில்லை; உங்கள் தகப்பளுருக்கும் கூடத்தான். அத் துடன் நானும் உங்களுடன் வருகிறேன்.” “எல்லையைத் தாண்டித் தானே?’ என்று கேட் டான் டுவான். ஃபான் மென்மையாகப் புன்னகை செய்தான். "ஆமாம், அமெரிக்காவில் எனக்கொரு மகன் இருக் கிருன். உங்களுக்கு யூஃபாங்கை நினைவிருக்கிறதா?” 'ஒஹோ! அவன் அமெரிக்காவிலா இருக்கி ருன்? குழந்தைகளாக இருக்கையில் ஈஸுவும் அவனும் ஒன்ருக விளையாடுவது வழக்கம். அவன் இறந்துவிட்டதாக நான் நினைத்தேன்.” 'அவன் உயிருடன் செளக்கியமாக இருக்கிருன், அமெரிக்காவில் அவனுக்கு நல்ல சம்பாத்தியம். நான் ஹாங்காங்கில் வசித்தால், அவன் வந்து என்னைப் பார்ப்பான். வயதான நாம் உயிர் வாழ் வதே இந்த மகிழ்ச்சிக்காகத்தானே, இல்லையா!' 'நீங்கள் என்னிடம் இதை இதுவரை சொன்ன தில்லையே!" என்று பதிலிறுத்தான் டுவான். 'அப்படி இல்லை. இங்கு அவனைப்பற்றிய செய்தி கிடைப்பது ரொம்பவும் சிரமமான காரியம். மேலும் ஒரு சமயம்-அதாவது மூன்று நான்கு வருஷங்கள் 12

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலட்சிய_பூமி.pdf/181&oldid=1274919" இலிருந்து மீள்விக்கப்பட்டது