பக்கம்:இலட்சிய பூமி.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18


உயர்வு பெற்ருன். 1950-ஆம் ஆண்டில் நடந்த பெரும் ஜனத்திரள் அணிவகுப்புக்களிலும் நிலப் பிரபுக்களைத் தூக்கிலிடும் நிகழ்ச்சிகளிலும் அவன் தன் இருபத்திரண்டாம் வயதிலேயே பங்கு பெற் றிருக்கிருன். 1952-53ல் நடைபெற்ற மூன்று. எதிர்ப்புக்கள், ஜந்து எதிர்ப்பு இயக்கங்களிலே*பூர்ஷ் வாக்களைச் சித்திரவதை செய்து அவமானப்படுத்திய நடவடிக்கைகளிலும் அவனுக்குப் பங்கு இருந்தது. 1955-ல் வலதுசாரிகளின் நிரந்தரச் சேனைகளைக் கலைத்துத் துய்மைப்படுத்திய சம்பவத்தையும் அவன் கண்டதுண்டு. இப்படி பல கட்டங்களிலும் அவன் பொறுப்பேற்ருலும், கடைசியில் உபத்திரவம் எதுவு மின்றித் தப்பிவிட்டான். கம்யூன்கள் எனப்பட்ட சிறு நகராட்சிப் பிரிவு அமைப்பின் பணியினல் நாட்டுப் பகுதிகளிடையே ஏற்பட்ட உருவ மாற்றத் தையும் எழுச்சியையும் பார்த்திருந்தான். ஊர்க் குருவிகளை நிர்மூலமாக்க அப்பகுதியின் மக்கள் பூராவும் இடம் பெயர்ந்து விடுவார்கள். அத் தகைய ஜனங்கள் லோஃபூவுக்கும் போக்லோவுக்கும் அடியில் அணையொன்று கட்ட விரைந்தார்கள். அப் புறம், வெள்ளம் வந்து பயிர்களை அழிக்கு முன்னே பயிர்களை அறுவடை செய்யத் திரும்பினர்கள். வெய்ச்சோ-போக்லோ பகுதியின் இருபது மைல் சுற்றளவிலிருந்த கிராமத் தலைவர்களுக்கு அவன் தொலைபேசி மூலம் உத்தரவுகளை அனுப்புவான்.

  • பூர்ஷ்வாக்கள்: மேன்மக்களுக்கும் உழைப்பாளி
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலட்சிய_பூமி.pdf/18&oldid=1274804" இலிருந்து மீள்விக்கப்பட்டது