உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலட்சிய பூமி.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

19


அவனுடைய ஆணைக்கு யாவரும் பூரணமாகக் கீழ்ப் படிவார்கள். இதை அவன் அறிந்திருந்தான். 1955-ஆம் வருடத்தில் கட்சி"யின் புனருத்தா ரணக் கடுஞ் சோதனைகளின்போது, அவனுக்கு உள்ளுற ஒருவகைப் பயம் இருந்தது. நிலப் பிரபுக் கள், நடுத்தர வகுப்புக் கடைக்காரர்களிடையே சீர்திருத்தம் ஏற்படாததால், அவ்வேலையின் பொறுப்பு அவனுடையதாயிற்று. அவனுக்கும் அவ. னுடைய நண்பனும் உத்தியோகக் கூட்டாளியுமான லான்க்வே இருவருக்குமிடையே நிகழ்ந்த தகவல்எதிர்த் தகவல் நடவடிக்கைகளிலே, அவன்தான் வெற்றி பெற்ருன். கொகோநோரின் சதுப்பு நிலங் களைச் சீர்படுத்த சீன டர்க்கிஸ்தானுக்கு லான்க்வே நாடு கடத்தப்பட்டான்; அப்புறம் அவனைப்பற்றி யாதொரு தகவலும் இல்லை. இதல்ை டெங்பிங்கின் மனைவி மிகவும் கோபமடைந்தாள். லான்க்வே அவ னுடைய பள்ளித் தோழன். அவர்கள் இருவரும் ரொம்பவும் அந்நியோந்நியமாகப் பழகினர்கள்: அவன் டெங்பிங்கின் வீட்டுக்கு இராச் சாப்பாட்டுக் காக அடிக்கடி வந்தான்; சில தருணங்களிலே, வாரத் துக்கு மூன்று நான்கு தடவைகூட வந்தான். தங்கள் தவறுகளைக் கண்டு அவர்கள் இருவருமே சிரித்துக் கொள்வார்கள். ஆதிக்கம், புகழ் முதலியவற்றைப் பெரும் ஆசைகளிலும் அவர்கள் பங்கு பெறுவ துண்டு. "செங்கொடி"யிலிருந்தோ அல்லது மத்தியச் செயற் குழுவிலிருந்தோ வரும் ரகசிய உத்தரவுகளை இருவரும் சேர்ந்தே படித்து விவாதிப்பார்கள். டெங்பிங் குள்ளமாகவும் பருத்தும் இருக்க, லான்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலட்சிய_பூமி.pdf/19&oldid=1274805" இலிருந்து மீள்விக்கப்பட்டது