பக்கம்:இலட்சிய பூமி.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

192


மனிதன் நான்! என் பழைய நண்பர்களான சென் சாம், லியூ இவர்களை நினைவிருக்கிறதல்லவா உனக்கு?’ என்ருன் ஃபான். "லியூவை எனக்கு நன்ருக நினைவிருக்கிறது. பூர்வாசிரமத்தில் நான் யாரென்பதை அவர்கள் நினைவில் வைத்திருப்பார்கள்.என்னைப்பற்றிஅவர்கள் அனைவருக்கும் தெரியும்.” “அதெைலன்ன? வேசியாக இருந்தவள் நீ! இருந்தால் என்ன? அங்கே உன் சிநேகிதிகள் சிலரை நீ நிச்சயம் சந்திப்பாய் என்று நான் பந்தயம் கட்டு கிறேன். தங்களுடைய நகைகளை ஆடம்பரமாக அணிந்துகொண்டு ஹாங்காங் பெரிய மனிதர்கள் கும்பலில் நடமாடும் விலைமகளிரையும் வைப்பாட்டி களையும் அங்கு நீ சந்திக்கக்கூடும்.” 'என் கவலையெல்லாம் அதுவல்ல." - 'அவர்களைப்பற்றியோ, அல்லது சினிமா நட்சத் திரங்களைப் பற்றியோ எனக்கு விரோதம் ஒன்றும் இல்லை. 'நீங்கள் விரோதம்கொள்ள என்ன இருக் கிறது!” "அதைத்தான் நான் சொல்கிறேன். வேசிகளைச் சிலர்தான் பார்க்கிரு.ர்கள்; சினிமா நட்சத்திரங்களை லட்சக் கணக்கிலே பார்க்கிருர்கள். இதுதான் வித்தியாசம்.” "அவர்கள் நடிக்கிரு.ர்கள்.” "அவர்கள் நடிக்கவில்லை; தங்கள் இனக் கவர்ச் சியைக் காண்பிக்கிருர்கள்.”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலட்சிய_பூமி.pdf/192&oldid=1274926" இலிருந்து மீள்விக்கப்பட்டது