உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலட்சிய பூமி.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

19| 'நீங்கள் அம்மாதிரியான கருத்துக்களைச் சொல் வதைக் கேட்கவே நான் விரும்புகிறேன். நீங்கள் என்னை கைவிட்டுவிடமாட்டீர்களல்லவா?’ என்ருள் லெய்வா. - - திடீரென்று எழுந்து உட்கார்ந்துகொண்ட மாதிரி அவன் உணரலானன். 'இதோ பார். நீயும் நானும் பதினன்குபதினைந்து வருஷங்களாக ஒன்ருகப் பழகி வந்திருக் கிருேம். நான் அப்படிச் செய்வேனென்று தோன்று கிறதா? பல துன்பங்களுக்கிடையே இத்தனை கால மாக எனக்கு ஒரளவு சந்தோஷத்தைக் கொடுத்த ஒரே ஒரு நபர் நீ ஒருத்திதானே! நான் நேசித்த ஒவ்வொன்றும்-என் புத்தகங்கள், ஒவியங்கள், பண்டைக்காலக் கலைப்பொருள்கள், பணியாட்கள், நல்வாழ்வு-வீடுவாசல் எல்லாம் போய்விட்டது. நாம் ஹாங்காங்கு சென்றபின் இதுபோல வசிக்கக் கூடாது; நல்ல வீடொன்றை நாம் அமைத்துக் கொள்வோம். என் தந்தையை அறிந்து நான் யார் என்பதை ஞாபகம் வைத்திருக்கக்கூடிய ஏராளமான நண்பர்கள் எனக்கு இன்னமும் ஹாங்காங்கில் இருக் கிரு.ர்கள். ஒரு கோடீஸ்வரன்-ஒரு செல்வச் சீமா னின் மகன், கல்வி மந்திரி ஒருவரின் மருமகன் இப்படிப் பலர் இருக்கிரு.ர்கள்! நல்லது. சர்வ சாதாரணமான மனிதன் நான்; சமுதாயத்திற்கு என்னல் அவ்வளவு நன்மையில்லை; ஆனால், தன்னு டைய சொந்த வாழ்க்கையைச் சிந்தித்து, திட்ட மிட்டுஅமைத்துக்கொள்ளக்கூடிய-தன் தவறுகளுக்கு தானே பொறுப்பாளியாக ஆகக்கூடிய நாகரிக

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலட்சிய_பூமி.pdf/191&oldid=752757" இலிருந்து மீள்விக்கப்பட்டது