பக்கம்:இலட்சிய பூமி.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

190


'தலைவர் மா, பிரதமர் சூ இவர்களைப் பார்க் கிலும் நான் ஒன்றும் அதிகமில்லை! அவர்கள் எல்லோரும் விஸ்கியைத்தான் வீரும்புகிருர்கள். குறுகியகால பூர்ஷ்வாக்கள்-மேன்மக்களுக்கும் குடி யானவர்களுக்கும் இடைப்பட்ட இவ்வகை ஜனங்கள் எல்லோரும் தங்களுக்குரிய சுகங்களைத் தவருன வழிகளில் பழகிக்கொண்டார்கள், நம்மைப்போல.” அவன் அவளது வெண்மையான கையைப் பற்றிக் கொண்டு, ஆனந்தம் பொங்கத் தடவினன். 'விஸ்கி எனக்குக் கிடைத்துவிடும்; நீயும் எனக்குக் கிட்டி விடுவாய். ஹாங்காங்கில் முதல் காரியமாக நான் என்ன செய்யப்போகிறேன், தெரியுமா?" "என்ன செய்யப் போகிறீர்கள்?" "கெட்டியான, பச்சைக்கல் வளையல் ஒன்று உனக்காக வாங்கப் போகிறேன்” என்ருன் ஃபான். அவள் தன் கையைப் பின்னுக்கு இழுத்துக் கொண்டு அவனுடன் நெருக்கமாக அணைந்தாள்; அவனுக்கு முத்தம் கொடுத்தாள். 'அழகிய உன்னுடைய கைகள் கொட்டிலி லிருந்து சாணம் பொறுக்குவதற்காக ஏற்பட்டவை அல்ல. இத்தகைய கைகள் ஒரு ஆடவனைத் தழுவு வதற்காக ஏற்பட்டவை, குழந்தையை அணைக்க ஏற்பட்டவை; அப்படி அல்ல என்றும், நீண்டபிடி கொண்ட மண் வெட்டிகளையும், எருக்கூடைகளையும் பிடிப்பதற்காக ஏற்பட்டவை என்றும் மா-சே-துங் உத்திரவு பிறப்பிக்கும் பொழுது மனித உணர்ச் சிக்கும் பிரபஞ்ச தத்துவத்துக்கும் கேடு செய்தவரா கிருர்' என்ருன் ஃபான்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலட்சிய_பூமி.pdf/190&oldid=1274925" இலிருந்து மீள்விக்கப்பட்டது