உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலட்சிய பூமி.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

189


முறுகிய கோழிக்கறியும் விலாங்குமீன் சூப்பும் நான் அங்கேதான் சாப்பிடப்போகிறேன்!” லெய்வாவின் விழிகளும் கூரையை நோக்கித் திரும்பின, ஒரு நீண்ட பிரயாணத்தின்பொழுது பெரும்பகுதி பட்டினி கிடத்துவிட்டு பிறகு ஹெங் யாங்கில் மாட்டிறைச்சி சாப்பிட்டதால் டுஃபூ என்னும் கவி இறந்தாரென்று நான் கேள்விப்பட் டேன். அது உண்மைதான?” “அதைப்பற்றியெல்லாம் எனக்கு அக்கறை இல்லை. நான் விஸ்கி மது அருந்தப் போகிறேன். பத்து வருஷமாக நான் விஸ்கி குடிக்கவில்லை. பெட்டி பெட்டியாக ஜானிவாக்கெர் மதுவை உனக்கு நான் அனுப்பிவந்தேனே, நினைவிருக்கிறதல்லவா?” "ஆமாம்; அந்த இன்பமான காலங்களை நான் மறக்கவில்லை, நினைவில் வைத்திருக்கிறேன்.” அத்தகையப் புட்டிகளிலே ஒன்று என் கையில் கிடைத்து, அதன் மீதிருக்கும் அந்தப் பழைய பழக்க மான முத்திரைச் சீட்டை நான் பார்க்கமுடிந்தால்.... ஆஹா!....பிரகாசம் பொருந்திய பெரிய கிளாஸில் ஊற்றி, துளித்துளியாக அதை உறிஞ்சிச் சுவைக்க நான் ஆசைப்படுகிறேன்! அங்கே அது கிடைக்கிறதா வென்று தேடிப்பார்க்க வேண்டும்; அது எனக்குக் கிட்டுமென்றே நான் எண்ணுகின்றேன்.” அவனுடைய மார்பில் தலையைப் பதித்த வண்ணம் உள்ளுறச் சிரித்துக்கொண்டு 'ஏ, சின்ன பூர்ஷ்வாவே' என்று மெல்லிய குரலில், பரிகாசம் செய்யும் வகையில் கூறினுள் லெய்வா.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலட்சிய_பூமி.pdf/189&oldid=1274924" இலிருந்து மீள்விக்கப்பட்டது