உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலட்சிய பூமி.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

盖83 மூச்சு விடுவோம். நீ அப்பொழுது ஒர் உணவு விடுதியை அடைந்து உனக்குப்பிடித்தமானவைகளைக் கொண்டுவரச்செய், ஹாங்காங்கில் முதல் சாப்பாட் டுக்கு நீ என்ன வாங்கிக்கொள்ளப் போகிருய்?" 'நண்டு!” 'வெளிப்புறம் மங்கலாகவும் பழுப்பு நிறமாகவும் உள்ளே மிருதுவாகவும் பாலேடு படிந்தும் உள்ள நன்கு வறுக்கப்பட்ட அவரைக்காய் போட்ட தயிர் பச்சடியை நான் சாப்பிடுவேன். ஊட்டமிக்க ருசியான குழம்பில் ஊறிய சாறுநிறைந்த வெண் ணெய் போன்ற வாத்து இறைச்சியும் நான் உண் பேன்' உடம்பைத் தளர்த்தியவனுக பின்னல் படுக் கையில் சாய்ந்தான் அவன். லெய்வா அவன் பக்கம் திரும்பினுள். "அப்படிப்பட்ட ஆகாரங்களை நமது வயிறு ஏற்காது. நாம் ரொம்பவும் கவனத்துடன் இருக்க வேண்டுமென்று அவர்கள் சொல்கிரு.ர்கள்' என்ருன். பிறகு சோம்பல் முறித்து சிகரெட் சாம்பலைத் தட்டி விட்டபடி, “அது என்னைக் கொல்வதாயிருந்தால்கூட நான் கவலைப்பட மாட்டேன்” என்ருன் அவன். தனக்கருகில் அவளைப் படுக்கச் செய்வதற்காக அவளைப் பின்வசமாக இழுத்தான் அவன். ஒரு கை அவளைச் சுற்றியிருந்தது; மறுகை சிகரெட்டைப் பற்றியிருந்தது; கூரையை நோக்கி கண்களைச் சிமிட் டிக்கொண்டே சொன்னன்; 'ஆஹா! இருமுறை கொதிக்க வைத்து சமைக்கப்பட்ட சுவைமிகுந்த, செச்சூயென் பன் றி இறைச்சியையும், வாசனைமிக்க

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலட்சிய_பூமி.pdf/188&oldid=752753" இலிருந்து மீள்விக்கப்பட்டது